ஆளுநர் விவகாரம்: முதல்வர் மனுவை பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க கோரினோம்- திமுக எம்பி டி.ஆர்.பாலு
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கொடுத்த மனுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்தோம் என திமுக எம்பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என நீட் தேர்வு விலக்கு மசோதாவை கிடப்பில் போடப்பட்ட போதே எழுந்தது. நீட் விலக்கு மசோதா மட்டுமல்லாமல் நிறைய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலும் காலம் தாழ்த்தியுள்ளார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அது போல் மிகவும் முக்கியமான மசோதாவான ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவையும் கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் எத்தனை உயிர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. இதனால்தான் இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டு வருகிறார்கள். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி பிரிவினையை தூண்டுவது போல் பேசுகிறார் என்றும் அவர் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் முரசொலியில் ஆளுநர் குறித்து காட்டமான கட்டுரைகளும் தீட்டப்பட்டு வந்தன.

காசி தமிழ் சங்கமம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்த ஆளுநர் அவர்களை பாராட்டி பேசினார். அப்போது அவர் தமிழ் குறித்து பேசும் போது தமிழ்நாடு தேசத்தின் அங்கம் அல்ல. தேசத்தின் ஒருங்கிணைந்த பகுதி என சொல்லி வருகிறார்கள். நாடு தழுவிய அளவில் எந்த ஒரு விஷயத்தை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிப்பது வாடிக்கையாகிவிட்டது.

மோசமான கட்டுக் கதைகள்
இதற்கு நிறைய தவறான, மோசமான கட்டுக் கதைகளை உருவாக்கியுள்ளனர். இவற்றை உடைக்க வேண்டும். தமிழ்நாடு என்பது நமது நாட்டின் ஆன்மா, அடையாளம். குறிப்பாக தமிழ்நாடு என சொல்வதை விட தமிழகம் என சொல்வதுதான் சரியாக இருக்கும் என ஆளுநர் பேசியிருந்தார். இதில் தமிழ்நாட்டை தமிழ்நாடு என சொல்வது சரியாக இருக்கும் என பேசியதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

தமிழகம் வெர்சஸ் தமிழ்நாடு
அன்று முதல் பெரும்பாலானோர் தமிழகம் என்று சிறியதாக எழுதுவதற்கு பதிலாக தமிழ்நாடு என்றே எழுதத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி

வெளிநடப்பு
மேலும் இதைத் தொடர்ந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ்நாடு, திராவிட மாடல், மதநல்லிணக்கம், சமத்துவம், சமூகநீதி, பல்லுயிர் ஓம்புதல், பெண்ணுரிமை உள்ளிட்ட வார்த்தைகளையும் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகியோரின் பெயர்கள் இருந்த பத்தியை தவிர்த்துவிட்டார்.

அமைதிப்பூங்கா
அது போல் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்பதையும் அவர் விட்டுவிட்டார். இதனை கண்டித்து முதல்வர் ஸ்டாலின் அவையில் தீர்மானத்தை வாசித்தார். அதில் ஆளுநர் படித்த உரை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் அவர் முழுமையாக படிக்காதது தனக்கு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதை அறிந்து கொண்ட ஆளுநர் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே பாதியிலேயே வெளியேறினார்.

குடியரசுத் தலைவரை சந்தித்த திமுக எம்பிக்கள்
தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, ஆ. ராசா தலைமையில் என்.ஆர்.இளங்கோ, டி.ஆர். பாலு, வில்சன் உள்ளிட்டோர் ஆளுநர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.30 மணிக்கு சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு திமுக எம்பி டி.ஆர். பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆளுநர் உரையின் போது சில வார்த்தைகளை தவிர்த்ததும் சில வார்த்தைகளை அவரே சேர்த்ததும் மரபுவுக்கு மீறிய செயல் என்றோம். மேலும் ஆளுநர் அவை மரபுகளை மீறிவிட்டார். தேசிய கீதம் பாடும் முன்பே அவர் வெளியேறியது தமிழ்நாடு சட்டசபையையும் தமிழ்நாடு மக்களையும் அவமதிக்கும் செயல். எனவே முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ள மனுவை படித்து பார்த்துவிட்டு உங்கள் மனதிற்கு பட்ட முடிவை எடுங்க என சொல்லியுள்ளோம். மேலும் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த மனு சீலிடப்பட்ட ஒன்றாகும். அதில் என்ன கோரிக்கை இருந்தது என தெரியாது. ஆனால் ஆளுநர் விவகாரம் என்பது மட்டுமே எங்களுக்கு தெரியும். இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications