"பிரித்தாளும் சூழ்ச்சி! திராவிடன் என்ற முதலில் குறிப்பிட்டதே ஆங்கிலேயர்கள் தான்!"ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று இந்த வருடத்துடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைக் கொண்டாடக் கோலாகல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக முதலில் நடைபெற்ற முதல் விடுதலை போராட்டமாகச் சிப்பாய் எழுச்சி பார்க்கப்படுகிறது.

சிப்பாய் எழுச்சி
ஆண்டுதோறும் வேலூர் சிப்பாய் எழுச்சி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. வேலூர் கோட்டையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். முன்னதாக வேலூரில் அமைந்துள்ள நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
அதன் பின்னர் கோட்டை மைதானத்துக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். வேலூர் கோட்டை மைதானத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ் மிகவும் சக்தி வாய்ந்த பழமையான ஒரு மொழியாகும். தமிழர்களின் கலாசாரமும் மிகவும் முக்கியமானது. தமிழ் மக்கள் போல தமிழில் பேச வேண்டும் என்பது தான் விருப்பம்.

கலகம் இல்லை புரட்சி
இந்த வேலூர் கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தை ஆங்கிலேயர்கள் கலகம் எனக் குறிப்பிடுகின்றனர். இது ஒரு புரட்சியாகும். சாதி, மதம் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் சிப்பாய் புரட்சியில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்திய வீரர்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இந்த வேலூர் சிப்பாய் புரட்சி தான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டது.

ஆங்கிலேயர்கள்
நாடு 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது. இந்தச் சூழலில் நாம் சுதந்திரத்துக்காக உயிர்நீத்த விடுதலை போராட்ட வீரர்களை நினைவில் கொள்ள வேண்டும். நேதாஜி ஐஎன்ஏ படைக்கு வீரர்கள் வேண்டும் என்ற போது, முதலில் ஆதரவு தந்தவர்கள் வேலூர் வீரர்கள் தான். ஆங்கிலேயர்கள் மதம், பொருளாதாரம் மற்றும் இடங்களை வைத்து நம்மைப் பிரித்தனர். ஆங்கிலேயர்கள் இங்கு வரும் முன்பு, பல மன்னர்கள் தான் நம்மை ஆண்டார்கள். அந்தச் சமயத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் சென்று வந்தார்கள்.

பிரித்தாளும் சூழ்ச்சி
வட இந்தியாவில் இருந்து மட்டும் மக்கள் இங்கு வரவில்லை. இங்கே இருந்தும் கூட அறிவை வளர்க்கக் காசி போன்ற இடங்களுக்கு மக்கள் சென்றுள்ளனர். அப்போது நாம் அனைவரும் ஒரே குடும்பமாகத் தான் இருந்தோம். ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னர் கல்வி தொடங்கி பல்வேறு துறைகளிலும் நாம் சிறந்து இருந்தோம். அவர்கள் தான் நம்மைப் பிரித்து ஆளும் சூழ்ச்சியைக் கையாண்டார்கள்.

திராவிடர்கள்
இன்று நாம் வரலாற்றைப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். அதாவது விந்திய மலையை அடிப்படையாக வைத்துத்தான் வட இந்தியா- தென் இந்தியா எனப் பிரித்தார்கள். அப்போது தான் விந்திய மலைக்குத் தென் பக்கம் இருப்பார்களைத் திராவிடர்கள் என அடையாளப்படுத்தினர். அதாவது ஆங்கிலேயர்கள் தான் திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டார்கள்.

அடுத்த 25 ஆண்டுகள்
இந்தியா இப்போது முன்னேற்றத்தை நோக்கிச் சென்று கொண்டு உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் நாம் பெரிய வளர்ச்சியை அடைய உள்ளோம். இன்னும் 25 ஆண்டுகளில் நாம் 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளோம். அதற்குள் கல்வி, பொருளாதாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் நாம் எந்தவொரு ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் வளர்ந்திருக்க வேண்டும்.

பிரதமர் மோடி
இதற்கு நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்ற எண்ணம் நமக்கு இருக்க வேண்டும். இதற்குத் தான் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை முற்றிலுமாக மாறி உள்ளது. வெளிநாடுகளுக்குப் பிரதமர் மோடி செல்லும் போது அவரை வரவேற்கும் விதைத்துப் பார்க்கும் போதே நான் சொல்வது என்னவென்று அனைவருக்கும் புரியும்" என்று அவர் தெரிவித்தார்.
-
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது












Click it and Unblock the Notifications