முதல்முறையாக கொடைக்கானல் செல்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி! 3 நாட்கள் பயணம்.. போக்குவரத்து மாற்றம்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொடைக்கானலுக்கு 3 நாட்கள் பயணமாக செல்கிறார். இதனால் கொடைக்கானலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று கொடைக்கானலுக்கு செல்கிறார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் அவர் மதுரைக்கு மதியம் 1மணிக்கு செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகிறார். கொடைக்கானலில் அரசுக்கு சொந்தமான கோகினூர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தங்குவார்.

இதைத் தொடர்ந்து நாளை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் இருக்கும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் செல்கிறார். அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் மதியம் அங்கிருந்து புறப்பட்டு கொடைக்கானலில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களை அவர் பார்வையிடுகிறார். மாலை மீண்டும் அரசு பங்களாவுக்கே செல்கிறார்.
இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் காலை 10 மணிக்கு கொடைக்கானலில் இருந்து காரில் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு ஆளுநர் செல்ல இருக்கிறார். அவர் பதவியேற்ற பிறகு முதல்முறையாக கொடைக்கானல் வருகிறார். இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானலுக்கு வருவதையொட்டி திண்டுக்கல் போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் எஸ்பி பாஸ்கரன் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் எஸ்பிக்கள், 13 துணை எஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என மொத்தம் 1,100 போலீஸார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். கொடைக்கானல் முழுவதும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
ஆளுநர் தங்கும் கோகினூர் மாளிகை, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அவர் பார்வையிட இருக்கும் சுற்றுலா இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டுகள் கண்டறியும் 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது போல் கொடைக்காநலில் போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும் வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. எனவே அந்த நேரத்தில் கொடைக்கானலுக்கு செல்லவும், கொடைக்கானலில் இருந்து வருவதற்கும் அந்த சாலையில் அனுமதி இல்லை. அதேநேரம் பழனி-பெருமாள்மலை வழியாக கொடைக்கானலுக்கு வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications