யார் அந்த 3 பேர்?.. ஐஏஎஸ் இறையன்பு கொண்டு வந்த லிஸ்ட்.. "அவருக்கு" டிக் அடித்த முதல்வர் ஸ்டாலின்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்பது தொடர்பான விவாதம்தான் தற்போது தலைமைச்செயலகத்தில் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதற்கான 3 பேர் கொண்ட இறுதி லிஸ்ட் தயாராகிவிட்டது.

Recommended Video

    யார் அந்த 3 பேர்?... Iraianbu IAS கொண்டு வந்த List | Oneindia Tamil

    பொதுவாக ஒரு மாநிலத்தின் போலீஸ் டிஜிபியை நியமனம் செய்ய வேண்டும் என்றால், மாநில அரசு மத்திய பணியாளர் தேர்வுக்குழு ஆணையத்திற்கு தகுதியான நபர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும். இந்த பட்டியலை சோதனை செய்து ஆணையம் 4-3 பேர் கொண்ட இறுதி பட்டியலை மாநில அரசுக்கு அளிக்கும்.

    மாநில அரசு 4-3 பேர் கொண்ட இந்த பட்டியலில் இருந்து தகுதியான அதிகாரியை டிஜிபியாக நியமனம் செய்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் இப்படி டிஜிபியை தேர்வு செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

    நியமனம்

    நியமனம்

    தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2019வருடம் ஜூன் மாதம் ஜே.கே திரிபாதி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இவரின் பதவிக்காலம் வரும் ஜூன் 30ம் தேதியோடு முடிவடைகிறது.இந்த நிலையில் தமிழ்நாடு போலீசின் புதிய டிஜிபியை தேர்வு செய்ய வேண்டும். பணி மூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் புதிய டிஜிபி நியமிக்கப்பட வேண்டும்.

    11 பேர்

    11 பேர்

    இதையடுத்து 11 பேர் கொண்ட லிஸ்டை கடந்த வாரமே மத்திய பணியாளர் தேர்வுக்குழு ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. இது தொடர்பாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் கலந்து கொண்டு ஆலோசனை செய்தார். 11 பேரின் பின்புலம் குறித்தும் இதில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

    விவாதம்

    விவாதம்

    அதன்படி போலீஸ் அதிகாரிகளின் வயது, பணி மூப்பு, குற்றப்பின்னணி என்று எல்லாம் ஆராயப்பட்டது. சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, ஷகில் அக்தர், பிரமோத் குமார், சங்கர் ஜிவால், ஏகே விஸ்வநாதன், சஞ்சய் அரோரா, பிரதீப் பி பிலிப், கந்தசாமி, சுனில் குமார் சிங், பிரஜேஜ் கிஷோர் ரவி ஆகியோரின் பெயர்கள் டெல்லிக்கு சென்ற நிலையில், சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, ஷகில் அக்தர், ஏகே விஸ்வநாதன், சஞ்சய் அரோரா, சுனில் குமார் சிங், பிரஜேஜ் கிஷோர் ரவி ஆகியோரின் பெயர்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டது.

    நீக்கம்

    நீக்கம்

    வயது மற்றும் பணி மூப்பு அடிப்படையில் இந்த பெயர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பின்னர், மீண்டும் நடந்த ஆலோசனைக்கு பின் மற்றவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, 3 பேரின் பெயர்கள் மட்டும் இறுதி செய்யப்பட்டன. சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, சஞ்சய் அரோரா ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன. நேற்று ஆலோசனைக்கு பின் தலைமை செயலாளர் இறையன்புவிடம் இந்த இறுதி செய்யப்பட்ட பட்டியல் வழங்கப்பட்டது.

    பட்டியல்

    பட்டியல்

    இந்த பட்டியல் முதல்வர் ஸ்டாலினிடம் அளிக்கப்பட்ட நிலையில், இதில் ஸ்டாலின் டிஜிபியாக வேண்டிய நபரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சைலேந்திர பாபுதான் டிஜிபி என்று கடந்த ஒரு மாதமாகவே செய்திகள் வந்தாலும், முதல்வர் ஸ்டாலின் டிக் அடித்தது யார் என்று இன்னும் உறுதியாக தகவல் வெளியாகவில்லை. உறுதியான அறிவிப்பு வரும் வரை 2 பேர் இடையே கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.

    இரண்டு பேர்

    இரண்டு பேர்

    சைலேந்திர பாபு, கரண் சின்ஹா இரண்டு பேரும் பணி மூப்பு கொண்டவர்கள். இரண்டு பேருமே உயர் பொறுப்புகளில் இருந்த அதிகாரிகள். இரண்டு பேர் மீதும் குற்றப்பின்னணி இல்லை. தற்போதைய அரசுக்கும் கொஞ்சம் நெருக்கமானவர்கள் என்பதால் இரண்டு பேரில் கடைசி நொடியில் யார் வேண்டுமானாலும் தேர்வு செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+