"11 பேர் கொண்ட லிஸ்ட்".. முதல்வர் அனுப்பிய முக்கிய பட்டியல்.. டெல்லிக்கு பறக்கும் இறையன்பு.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனை நடந்து வருகிறது. இதற்காக 11 பேர் கொண்ட லிஸ்டை தமிழ்நாடு அரசு டெல்லிக்கு அனுப்பி உள்ளது.

Recommended Video

    Tamilnadu New DGP யார்? | CM அனுப்பிய முக்கிய பட்டியல் | Oneindia Tamil

    தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2019-ம் வருடம் ஜூன் மாதம் ஜே.கே திரிபாதி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இவரின் பதவிக்காலம் வரும் ஜூன் 30ம் தேதியோடு முடிவடைகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு போலீசின் புதிய டிஜிபியை தேர்வு செய்ய வேண்டும். பணி மூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் புதிய டிஜிபி நியமிக்கப்பட வேண்டும்.

    நியமனம்

    நியமனம்

    இதற்கான பட்டியல் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது. அடுத்த டிஜிபி ஆக தகுதி உள்ள 11 போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தயாரித்துள்ளது. இந்த லிஸ்ட் தற்போது மத்திய பணியாளர் தேர்வணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

     தகுதி

    தகுதி

    இதில் தகுதியான அதிகாரியை மத்திய பணியாளர் தேர்வாணைக்குழு தேர்வு செய்யும். வரும் திங்கள் கிழமை இதற்கான தேர்வு நடக்க உள்ளது. இந்த ஆலோசனையில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு டெல்லிக்கு செல்ல இருக்கிறார். தகுதியான அதிகாரியை இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்வு செய்வார்கள்.

     எப்படி?

    எப்படி?

    பணி மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, ஷகில் அக்தர், பிரமோத் குமார், சங்கர் ஜிவால், ஏகே விஸ்வநாதன், சஞ்சய் அரோரா, பிரதீப் பி பிலிப், கந்தசாமி, சுனில் குமார் சிங், பிரஜேஜ் கிஷோர் ரவி ஆகியோரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ஸ்டிரிக்ட்

    ஸ்டிரிக்ட்

    தமிழ்நாடு அரசு அனுப்பி இருக்கும் இந்த பட்டியலில் இடம்பெற்று இருக்கும் அதிகாரிகள் பலர் மிகவும் ஸ்டிரிக்ட் மற்றும் நேர்மையான அதிகாரிகள் என்று பெயர் எடுத்தவர்கள். முக்கியமாக அதிகாரிகள் சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, ஏகே விஸ்வநாதன், சஞ்சய் அரோரா, சுனில் குமார் சிங், ஆகியோர் இந்த டிஜிபி போட்டியில் முன்னிலையில் இருக்கிறார்கள்.

    தேர்வு

    தேர்வு

    11 பேரின் பட்டியல் அனுப்பப்பட்டு இருந்தாலும், இதில் குற்ற வழக்கு இல்லாத பணி அனுபவ மூப்பு கொண்ட 5 பேரின் பெயர் இறுதி செய்யப்பட்டு, அதன்பின் புதிய பட்டியல் தயார் செய்யப்படும். இதில் ஒவ்வொரு அதிகாரியின் பின்புலம், அனுபவம் ஆராயப்பட்டு 4 அதிகாரிகளின் பெயர்கள் தலைமை செயலாளரிடம் தரப்படும்.

    இறுதி முடிவு

    இறுதி முடிவு

    இந்த பட்டியலை தமிழ்நாடு அரசு மீண்டும் சோதனை செய்யும். 4 பேரில் தகுதியான நபர்கள் யார் என்று சோதனை செய்து அதில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இதில் சைலேந்திர பாபுவிற்கு டிஜிபி ஆகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. வரும் திங்கள் கிழமை மாலை டிஜிபி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+