வெறும் 3 மணி நேரம்.. ஓமிக்ரான் கொரோனாவை துல்லியமாகக் கண்டறியலாம்.. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
சென்னை: உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரசை எளிதாக வெறும் 3 மணி நேரத்தில் கண்டறியும் வகையில் தமிழகத்தில் உள்ள 12 ஆய்வகங்களுக்கு டேக்பாத் கிட் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே உலக நாடுகளின் முக்கிய பேசுபொருளாக மாறிவிட்டது. ஒமிக்ரான் உருமாறிய கொரோனா. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது.
கடந்த காலங்களில் உருமாறிய கொரோனா வகைகளே அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தியதால், இம்முறை உலக நாடுகள் எச்சரிகையுடன் உள்ளன.

ஓமிக்ரான் கொரோனா
தென் ஆப்பிரிக்காவில் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டிருந்தாலும் கூட, வெறும் சில நாட்களில் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த உருமாறிய வைரஸ் பரவிவிட்டது. உலக சுகாதார அமைப்பு ஓமிக்ரான் கொரோனாவை கவலைக்குரிய கொரோனா வகையாக பட்டியிடப்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. ஜப்பான், பிரிட்டன் போன்ற நாடுகள் முழுமையாகவே வெளிநாட்டினருக்குத் தடை விதித்து விட்டன.

புதிய கட்டுப்பாடுகள்
இந்தியாவில் தற்போது வரை ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை. தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில், என்ன வகையான வைரஸ் பாதிப்பு என்பதைக் கண்டறிய மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனிடையே ஓமிக்ரான் கொரோனா வைரசை கண்டறிந்து, தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

12 நகரங்கள்
பொதுவாக மரபணு வரிசைப்படுத்துதல் சோதனை மூலம் ஒருவருக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய ஒரு வாரம் வரை கூட ஆகும். ஆனால், வெறும் 3 மணி நேரத்தில் ஒமிக்ரான் உருமாறிய வைரஸை கண்டறியும் வசதி தமிழ்நாட்டில் உள்ள 12 ஆய்வகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச விமான நிலையங்கள் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட12 அரசு ஆய்வகங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெறும் 3 மணி நேரத்தில்
இதற்காக டேக்பாத் கிட் சம்பந்தப்பட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டால் அவர்களுக்கு இந்த டேக்பாத் கிட் மூலம் எந்த வகையான உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை வெறும் 3 மணி நேரத்தில் கண்டறியலாம். தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சார்பில் இந்த கிட்கள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உருமாறிய கொரோனா
இதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரான் கொரோனா வித்தியாசமானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் கொரோனாவின் புரோத ஸ்பைக்கில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதாகவும் இதுவரை எந்த உருமாறிய கொரோனா வைரசிலும் இந்தளவுக்கு மாற்றங்களைக் கண்டறியவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக சுகாதார அமைப்பும் இந்த ஓமிக்ரான் கொரோனா வகையைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications