2021 புத்தாண்டின் முதல் நாளில் தமிழகத்தில் எவ்வளவு பேருக்கு கொரோனா தெரியுமா?
சென்னை: 2021 புத்தாண்டின் முதல் நாளான இன்று தமிழகத்தில் கொரோனா தொற்றால் 921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட குறைவு ஆகும். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,18,935 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 8,380 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Recommended Video

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2020 மார்ச்சில் தொடங்கிய நிலையில் 2021ம் ஆண்டு பிறந்த நாளான இன்று தொற்று பெரிய அளவில் குறைந்துள்ள

சென்னை உள்பட எல்லா மாவட்டங்களுமே கொரோனாவால் முன்பு போல் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை . தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,18,935 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்பபடி தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 8,380 பேர் மட்டுமே சிசிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்று கொரோனா தொற்றால் 13 பேர் பலியாகிய நிலையில் இன்றும் 13 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,135 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 1,029 பேர் மீண்டனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,98,420 பேர் மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 252 பேர், கோவையில் 82 பேர், செங்கல்பட்டில் 54 பேர், திருவள்ளூரில் 40 பேர், திருப்பூரில் 46 பேர், ஈரோட்டில் 44 பேர், காஞ்சிபுரத்தில் 32 பேர், சேலத்தில் 40 பேர், திருச்சியில் 20 பேர் மற்றும் மதுரையில் 18 பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில்இருந்த 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 44 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications