தமிழகத்தில் காலியான ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல்.. வாக்குப் பதிவு தொடங்கியது
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற இருந்த தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், வாக்காளர் பட்டியல், வார்டு குளறுபடி காரணமாக தொடரப்பட்ட வழக்கால் நிறுத்தப்பட்டது. இதனால் 3 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவில்லை. இதனிடையே புதிதாக 9 மாவட்டங்களை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 2019 ஆம் ஆண்டு மறு சீரமைப்பு செய்யப்பட்ட மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதற்கிடையே ஊரக, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும், பதவி விலகியதாலும் அந்த இடங்கள் காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டன.
இவ்வாறு கிராம புறங்களில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என 498 இடங்கள் காலியாக உள்ளன. நகர்புறங்களில் மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 12 பதவிகள் காலியாக உள்ளன. எனவே மொத்தம் 510 இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த காலியிடங்களுக்கான தேர்தல் இன்று அதாவது ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6 வரை நடைபெறும். 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்துமே ஜூலை 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அன்று 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். அதிமுகவில் உள்கட்சி பூசல் நடைபெறுவதால் படிவம் ஏ மற்றும் பி-யில் அதிமுக தலைமை கையெழுத்திடாததால் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து சுயேச்சை சின்னங்களில் போட்டியிடுகிறார்கள். மேலும் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications