பாமகதான் 3வது பெரிய கட்சி என்று நிரூபணம் ஆகிவிட்டது.. அதிமுகவிற்கு நன்றி.. ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை
தமிழகத்தில் பாமகதான் மூன்றாவது பெரிய கட்சி, பாமகவின் வெற்றிக்கு உழைத்த அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு நன்றி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பாமகதான் மூன்றாவது பெரிய கட்சி, பாமகவின் வெற்றிக்கு உழைத்த அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு நன்றி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் திமுக மாபெரும் வெற்றியை பெற்று, வெற்றி கூட்டணியாக திகழ்கிறது. அதிமுகவும் அதிக இடங்களை அபாரமாக வென்றுள்ளது.
திமுக, அதிமுகவை அடுத்து தமிழகம் முழுக்க அமமுக, நாம் தமிழர் கட்சிகள்தான் அதிக இடங்களை வென்றுள்ளது. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமகதான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன அறிக்கை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 36 மாவட்ட ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு 16 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 430 இடங்களில் களமிறங்கி 224 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாமக நன்றாகவே செயல்பட்டுள்ளது.

நல்ல போய்ட்டு
இந்த தேர்தலில் மற்ற கட்சிகளை விட பாமகவின் வெற்றி விழுக்காடு தான் அதிகம். பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட இடங்களில் 52.09 விழுக்காட்டு இடங்களை வென்றுள்ளது. கட்சி மீது மக்கள் வைத்து இருக்கும் தீவிர ஆதரவை இந்த வெற்றி காட்டுகிறது.

வேறு என்ன
மாவட்ட ஊராட்சிகளைப் பொறுத்தவரை களமிறங்கிய இடங்களில் 44.44% இடங்களில் வெற்றி வாகை சூடியிருக்கிறோம். பாமக தொடர்ந்து தமிழகம் முழுக்க வளர்ந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் அதிமுக தலைமையிலான அணி அதிக இடங்களை வென்றுள்ளது.

அதிமுக இடம்
அதிமுக வென்ற இடங்களை விட திமுக தலைமையிலான அணி வென்ற இடங்களின் எண்ணிக்கை மெல்லிய அளவில் தான் அதிகமாகும். இது மிகப்பெரிய வெற்றி என்பதில் சந்தேகமில்லை. இன்னும் சில இடங்களில் முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன. அப்போது வெற்றி விழுக்காடு உயரும்.

மக்கள் ஆதரவு
உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அதன் செல்வாக்கையும், வலிமையையும் ஒப்பிடும் போது மிகவும் குறைவான இடங்களில் தான் போட்டியிட்டது. இதில் பெரிய வித்தியாசம் இல்லை. ஒருவேளை அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தால் அதிமுக அணி தான் முதலிடம் பிடித்து இருந்திருக்கும்.

பாட்டாளி மக்கள்
திமுகவிற்கு பெரிய அளவில் மக்கள் ஆதரவு இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையாக திகழும் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். நடைபெற்று முடிந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

எல்லோருக்கும் நன்றி
எங்களுக்கு ஆதரவு அளிக்க வாக்காள பெருமக்களுக்கு நன்றி. தமிழகத்தில் பாமகதான் மூன்றாவது பெரிய கட்சி, பாமகவின் வெற்றிக்கு உழைத்த அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு நன்றி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications