போட்டியே கூடாது.. கலெக்டர்களிடம் "ஸ்டிரிக்ட்டாக" சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. மீட்டிங்கில் என்ன நடந்தது
சென்னை: மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிகாரங்களை மறந்து, களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் தினமும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் 18,06,861 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 35873 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 448 பேர் 24 மணி நேரத்தில் பலியான நிலையில் 87,300 பேர் மொத்தமாக பலியாகி உள்ளனர். 20,046 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ஊரடங்கு
ஊரடங்கு விதிகளை மக்கள் சரியாக மதிக்காமல் சுற்றியது இதற்கு முக்கிய காரணமாகும். தளர்வுகளை பயன்படுத்திக்கொண்டு மக்கள் வெளியே சுற்றியதும் கேஸ்கள் உயர காரணம் ஆகும். இதையடுத்து நேற்று மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடந்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார்.

தளர்வுகள்
முன்பு போல தளர்வுகள் இல்லாமல், அடுத்த ஒரு வாரத்திற்கு முழு லாக்டவுன் இருக்கும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட மக்கள் வெளியே செல்ல கூடாது. காய்கறி, மளிகை பொருட்கள் கூட வீடு தேடி வரும் என்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஸ்டாலின் ஆலோசனை
முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மீட்டிங் நடந்தது.

கடும் கட்டுப்பாடு
இந்த ஆலோசனையில் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அவசியம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. எங்கெல்லாம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். மக்களை எப்படி கண்காணிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் செய்யப்பட்டது. புதிய கட்டுப்பாடுகளை நாளை முதல் அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது

ஸ்டாலின்
இதில் ஆட்சியர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், கொரோனா சங்கிலியை உடைக்கவே ஊரடங்கு. நீங்கள் ஒத்துழைத்தால்தான் ஊரடங்கு வெற்றிபெறும். கொரோனா பரவல் ஒரு பக்கம், பொருளாதார நெருக்கடி இன்னொரு பக்கம் இருக்கிறது.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எப்படி
எனது முயற்சிகளால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது என தலைநிமிர்ந்து நீங்கள் சொல்லும் அளவுக்கு உங்கள் பணிகள் இருக்க வேண்டும். என் மாவட்டத்தில் கொரோனா இல்லை என்று சொல்லும் அளவிற்கு நீங்கள் பணியாற்ற வேண்டும். நீங்கள் திறமையானவர்கள். உங்களால் அது முடியும். உங்கள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.

கூடாது
மாவட்ட ஆட்சியர்கள், காவலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். யாருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது என்ற போட்டி இருக்க கூடாது. எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரம் இது. அதிகார மோதல்கள் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அதிகாரம்
யார் சிறியவர்கள், யார் பெரியார்கள் என்ற போட்டி உங்களுக்கு இடையில் இருக்க கூடாது. நம்மை எல்லாம் விட இந்த கொரோனாதான் பெரியது என்பதை மறக்க கூடாது. மக்களுக்காக களத்திற்கு செல்லும், கட்டுப்பாடுகளை கண்காணியுங்கள், மருத்துவமனைகளை தயார் நிலையில் வையுங்கள் என்று மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications