10, +2 பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. முழு விபரம்
சென்னை: கொரோனா பரவல் காரணமாக 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ந் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமலில் உள்ளது. இரவு நேர லாக்டவுன் தமிழ்நாடு முழுக்க அமலில் உள்ளது.
அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன், வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

பள்ளிகள்
இந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இனி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் 10 - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் 19ம் தேதி திருப்புதல் தேர்வு நடக்கும் என்று அறிவிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

10 - 12 ஆம் வகுப்பு
திட்டமிட்டபடி இந்த தேர்வுகள் 19ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது. இதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தோ்வுகள் வருகிற 19-ஆம் தேதி நடைபெறும் என்றும், பத்தாம் வகுப்பிற்கு 19ம் தேதி தேர்வுகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக கொரோனா பரவல் காரணமாக 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ந் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

வாபஸ்
முந்தைய அறிவிப்புகள் வாபஸ் பெறப்பட்டு ஜனவரி 31 வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 10 மற்றும் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. பொது தேர்வுக்கு இணையாக மாநில அளவில் ஒரே தேர்வுத்தாளுடன் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

தேர்வுகள் ஒத்திவைப்பு
ஆனால் இப்போது திடீரென பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. கேஸ்கள் உயர்வதை கருத்தில் கொண்டு இந்த புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications