சீமானை ஒருமையில் விமர்சித்த தா.மோ.அன்பரசன்! பெரியார், அண்ணா பற்றி பேசிட்டு எங்க வெளியே போய்டுவியா?
சென்னை: பெரியார், அண்ணா பற்றி பேசிவிட்டு இந்த மாவட்டத்தை விட்டு வெளியே போயிடுவியாடா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழ்நாடு சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஒருமையில் எச்சரித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாக சொல்லப்படும் இடம்பெற்றுள்ளதாவது: டே.. வெட்கமா இருக்கு எங்களுக்கே..கண்ட நாயெல்லாம் அண்ணாவை பற்றி பேசுறான் இந்த நாட்டில்..

மாவட்டத்தை விட்டு போயிடுவியாடா?: இந்த சீமான்னு ஒருத்தன் அண்ணாவை பற்றி பேசுறான்.. பெரியாரை பற்றி பேசுறான்.. இந்த மாவட்டத்தில் நீ பேசிட்டு வெளியேறி போயிடுவியாடா? சொல்லு பார்க்கலாம். அவமானமா இருக்கு நமக்கு. பெரியார் தியாகத்துக்கு இவனெல்லாம் ஒரு... சமமாவானா?
அண்ணாமலை மீது விமர்சனம்: அண்ணாமலைன்னு ஒரு.... பய அண்ணாவை பற்றி பேசுறான்.. பெரியாரைப் பற்றி பேசுறான்.. இதெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருக்கானுங்க இந்த நாட்டுல.
ஆட்சி முக்கியம் இல்லை: நான் ஏற்கனவே ஒரு கூட்டத்துல கூட்டத்தில சொன்னேன்.. ஆட்சி எல்லாம் நமக்கு முக்கியமல்ல.. தன்மானம்தான் முக்கியம். என்றைக்கும் உங்களுக்காக உழைக்கக் கூடிய இயக்கம் திமுகதான்.

ஊருக்கு ரெண்டு பேரு கூட இல்லை: இன்னைக்கு யோக்கியன் மாதிரி பேசுறான் பிஜேபிகாரன். ஊருக்கு ரெண்டு பேரு கூட இல்லை. ஒருத்தன் இருக்கானா? இன்னைக்கு மோடி வந்துட்டார்.. மோடி வந்துட்டார்னு மோடி வித்தை காட்டுறானுக.. டேய்.. உங்க மோடி வித்தை எல்லாம் இங்க எடுபடாது ஞாபகம் வெச்சுக்க. நீ என்னா கத்து கத்தினாலும் சரி அதிமுககாரனுடன் கூட்டணியே வெச்சிக்கினாலும் சரி 2024 தேர்தலில் உங்களை நாங்க பார்க்கிறோம்.. வா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, 3 வருஷத்துக்கு முன்னாடி பிஜேபிகாரன் ஊரில் இருந்தானா? இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரன் பேசியுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்து பாஜகவினர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
பாஜக நாராயணன் திருப்பதி கண்டனம்: அமைச்சர் தா.மோ.அன்பரசின் இந்தப் பேச்சுக்கு தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாராயணன் திருப்பதி, 'புறம்போக்குகளே, களவாணிப்பயல்களே, வெட்கம் கெட்டவர்களே', எங்கள் தலைவர் அண்ணாமலையை தரக்குறைவாக பேசாதீர்" என பதிலடி கொடுத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications