ஆருத்ரா மோசடி: துபாய் சிறையில் ராஜசேகர்.. புறப்பட்ட சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்
சென்னை: ஆருத்ரா மோசடியில் சிக்கிய முக்கிய குற்றவாளியை அழைத்து வர துபாய்க்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் செல்கிறார்கள்.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயமுத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற பெயரில் ஆருத்ரா தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இங்கு ரூ 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ 36 ஆயிரம் வரை வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதை பலரும் நம்பி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அந்த நிறுவனமோ 1,09,255 பேரிடம் ரூ 2,438 கோடி வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ 96 கோடி முடக்கப்பட்டது.
மேலும் ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 125 க்கும் மேற்பட்ட சொத்துகளும் முடக்கப்பட்டன. இது ஒரு புறம் இருக்க அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜசேகர் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்குத் தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. அவர்களை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர். மேலும் இன்டர்போல் மூலம் கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸும் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சர்வதேச போலீஸார் (இன்டர்போல்) உதவியுடன் ராஜசேகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அபுதாபியில் கைது செய்தனர். இந்த வழக்கில் பாஜக பிரமுகரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் துபாயில் இருந்து சென்னை வந்தார். அவரிடம் நாளை பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்தவுள்ளது. இந்த நிலையில் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் துபாய் சென்றுள்ளனர். துபாய் நீதிமன்ற அனுமதியுடன் ராஜசேகரை அழைத்து வருகிறார்கள்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications