தொடரும் கனமழை.. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Recommended Video
அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக அதிகாலையிலேயே 4 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.
சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது சென்னையிலும் வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.

ஆனால் அதன்பின் வடமாவட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறைந்தது. வட தமிழக கடலோரப் பகுதியில் இது தாழ்வு பகுதியாக வலிமை இழந்து நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்.
இன்று இரவு சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும். இன்று இரவும், நாளையும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேபோல் சென்னையிலும் இன்று இரவு லேசானது முதல் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஈரோடு சேலம் தர்மபுரி வேலூர் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.20) விடுமுறை விடப்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.20) விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் இன்று காலையில் இருந்து கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இங்கு நாளையும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications