அதி தீவிர கனமழை.. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை தீவிரம் அடைந்த வடகிழக்கு பருவமழை தற்போது உச்சம் தொட்டுள்ளது.
தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வடமேற்கு பகுதியாக திரும்பி தமிழ்நாடு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலிமை பெற்று வருகிறது.

தீவிர மழை
நேற்று மாலையில் இருந்து இரவு முழுக்க தமிழ்நாடு முழுக்க பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. சென்னையில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் இரவு முழுக்க பெய்த மழை காரணமாக சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பள்ளி
இந்த தொடர் மழையை தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருச்சி, இராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், மதுரை, அரியலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், சிவகங்கை, சென்னை, காஞ்சி, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுமுறை
மேலும், சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல், விருதுநகர், தேனி நாகை, மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Recommended Video

நாளையும் விடுமுறை
தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழையை பொறுத்து மேலும் சில மாவட்டங்களில் விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications