9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்... அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..!
சென்னை: 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முடிவடையாததால் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அதை செயல்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். இதனிடையே மேற்கண்ட 9 மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன் வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கடந்த மாதம் 31-ம் தேதியே இறுதி வாக்காளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் 76 லட்சத்து 59 ஆயிரத்து 720 பேர் வாக்காளர்களாக உள்ளனர். மேலும், சட்டமன்றத் தேர்தலை போல் வாக்குப்பதிவு நேரத்தின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 6 மணி முதல் 7 மணி வரை பிரத்யேகமாக நேரம் ஒதுக்கீடு செய்ய மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அதற்கேற்ற வகையில் தேர்தல் ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மேற்கண்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சித் தலைமைகள் கவனம் செலுத்தத் தொடங்கியிருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications