வல்லரசுகளில் சக்ஸஸ் ஆன அதே திட்டம்.. சும்மா இருந்த ஹெலிகாப்டரை தூசி தட்டிய தமிழ்நாடு அரசு.. பின்னணி
சென்னை: பல்வேறு வல்லரசு நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் ஏர் ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் முடிவை எடுத்து இருக்கிறது.
Recommended Video
உலகம் முழுக்க முன்னேற்றம் அடைய அடைய, மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளும் மாற்றம் அடைந்து வருகின்றன. முன்பு வீடுகளுக்கு செய்யப்பட்ட டோர் டெலிவரிகள் தற்போது டிரோன்கள் மூலம் பல நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் உணவும் கூட டிரோன் மூலம் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சர்வதேச நாடுகள் பலவற்றில் ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் அமலில் உள்ளது. எப்படி அமெரிக்காவில் போலீசார் ஹெலிகாப்டர்களை பயன்படுத்துகிறார்களோ அதேபோல் அங்கு பல மருத்துவமனைகளிலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆம்புலன்ஸ்
அவசரமான சிகிச்சைகள், பேரிடர்கள் ஏற்படும் போது மக்களை காப்பாற்ற இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. உலகின் பல நாடுகளில் இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஸ்வீடன், பிரிட்டன் போன்ற 13 நாடுகளில் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடர்ந்து தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

தொடர் சேவை
அவசரமான ஆபரேஷன், இதய மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றிலும் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதிலும் இந்த ஏர் ஆம்புலன்ஸ்கள் அதிகம் உதவுகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் இந்த திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. வல்லரசு நாடுகளில் சக்ஸஸ் ஆன அதே திட்டம் தமிழ்நாட்டிற்கும் கொண்டு வரப்பட உள்ளது.

என்ன ஹெலிகாப்டர்
2005ல் தமிழ்நாடு அரசு, அரசு தேவைகளுக்காக ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கியது. 412 இபி என்ற வகை ஹெலிகாப்டர் ஆகும் இது. நல்ல நிலையில் இருக்கும் இந்த ஹெலிகாப்டர் அதன்பின் அரசு பயணங்கள் எதற்கும் பயன்படுத்தப்படவில்லை. கடந்த 3 வருடமாக எங்கேயும் எடுத்துச் செல்லப்படாமல் பராமரிப்பு பணிக்காக மட்டும் அவ்வப்போது பறக்கிறது.

மாற்றும் திட்டம்
இதை ஏர் ஆம்புலன்ஸாக மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஒரு 108 ஆம்புலன்ஸ் உள்ளே எப்படி ஒரு சின்ன ஐசியூ வார்டே இருக்குமோ அதேபோல் இந்த ஹெலிகாப்டரை ஆம்புலன்ஸ் ஆக மாற்றம் செய்துள்ளனர். உள்ளேயே அவசர சிகிச்சை, முதலுதவி, உயிர் காக்கும் சிகிச்சைகள் வழங்கும் வகையில் இந்த ஹெலிகாப்டரை மாற்ற உள்ளனர். அதாவது ஆகாயத்தில் பறக்கும் 108 ஆம்புலன்ஸ் போல இதை மாற்ற உள்ளனர்.

எங்கே
எந்தெந்த மாவட்டங்களில் இதை பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பேரிடர்கள், அவசர காலங்களில் இதை பயன்படுத்தும் முடிவில் அரசு உள்ளது. விரைவில் இது முழு பயன்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தாலோ, மூளை சாவு அடைந்தவரின் இதயத்தை வேறு ஒருவருக்கு செலுத்த வேண்டும் என்றாலே காரில் அவசர அவசரமாக இதயத்தை கொண்டு செல்ல வேண்டும்.

உண்மை சம்பவம்
தமிழ்நாட்டில் உண்மை சம்பவங்களும் இது போல நடந்து இருக்கின்றன. ஹெலிகாப்டர் இருக்கும் பட்சத்தில் இதை எளிதாக செய்ய முடியும். கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளாவில் இதய மாற்று அறுவை சிகிச்சையில் மூளை சாவு அடைந்தவரின் இதயத்தை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் நேரடியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications