ஒடிசா பறக்கும் அமைச்சர் சிவசங்கர்.. ரயில் விபத்து குறித்து சொன்ன முக்கிய அப்டேட்
சென்னை : ஒடிசா ரயில் விபத்து குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் ஒன் இந்தியாவிற்கு தொலைப்பேசி வாயிலாக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இன்று காலை முதல் விமானத்தில் நாங்கள் ஒடிசா செல்ல உள்ளோம். நம்முடைய முதலமைச்சர் அவர்களின் பிரதிநிதிகளாக அங்கிருந்து காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வோம் என்றர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் 350க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் 800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தகவல் தெரிவித்துள்ளது.இந்த கோரவிபத்து காரணமாக கிழக்கு கடற்கரை ரயில்வே வழித்தடத்தில் வரும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

விபத்தில் உயிரிழந்தோருக்கு ₹10 லட்சம், பலத்த காயம் அடைந்தோருக்கு ₹2 லட்சம், லேசான காயம் அடைந்தோருக்கு ₹50,000 நிவாரணத்தை ரயில்வே அறிவித்துள்ளது
ரயில் விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளார்; விமானப்படையும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஒடிசா ரயில் விபத்து குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் ஒன் இந்தியாவிற்கு தொலைப்பேசி வாயிலாக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஒடிசா விபத்து குறித்து கேள்விப்பட்ட உடன், உடனடியாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தொடர்பு கொண்டு பேசினார். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய கோரி உள்ளார்.
அதேபோல் முதல்வர் அலுவலகமும் முழுமையாக இயங்கி வருகிறது. ஒடிசாவில் இருக்கின்றன ஐஏஏஸ் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அங்கே பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ரயில்வே துறையுடன் தேவையான உதவிகளை பெற தொடர்பில் இருக்கிறார்கள்.
இதற்கிடையே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் சார்பாக ஒரு குழுவை அமைக்க திட்டமிட்டு, அந்த குழுவில் போக்குவரத்து துறை அமைச்சராகிய என்னையும், அதேபோல் வருவாய் துறை செயலர் அர்ச்சனா உள்பட 3 ஐஏஏஸ் அதிகாரிகள் குழுவை அனுப்ப பணிந்திருக்கிறார்கள்.
நாளை காலை முதல் விமானத்தில் நாங்கள் ஒடிசா செல்ல உள்ளோம். நம்முடைய முதலமைச்சர் அவர்களின் பிரதிநிதிகளாக அங்கிருந்து காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வதற்கும், அங்கிருந்து தமிழ்நாடு வருவதற்கான உதவிகளை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகளை செய்வதற்கு தமிழ்நாட்டினுடைய முதல்வர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்" இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிரவித்தார்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications