பெரும் அடி.. மாநகராட்சி 0.. நகராட்சி, பேரூராட்சி எத்தனை? பின் தங்கிய பாஜக.. எங்கெல்லாம் முன்னணி?
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக 3 பேரூராட்சிகளில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் முன்னணி நிலவரங்கள் வெளியே வந்துள்ளன. இந்த முறை 8 முனை போட்டி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 12838 பதவிகளுக்கு தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

பாஜக
இந்த நிலையில் தற்போது வரை வெளியாகி இருக்கும் முன்னணி நிலவரங்களின்படி பாஜக 3 பேரூராட்சிகளில் முன்னிலை வகிக்கிறது. 489 பேரூராட்சிகளில் 3ல் மட்டுமே பாஜக முன்னிலை வகிக்கிறது. திமுக 123 பேரூராட்சிகளில், அதிமுக 17 பேரூராட்சிகளில் முன்னிலை வைக்கிறது. பேரூராட்சி தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியே பாஜக இருக்கிறது. இருப்பினும் முன்னிலை நிலவரங்களுக்கு இடையிலான இடைவெளி மிக அதிகம் உள்ளது.

பாஜக நகராட்சி
138 நகராட்சிகளில் பாஜக கடுமையான பின்னடைவை சந்தித்து உள்ளது. இதில் பாஜக ஒரே ஒரு நகராட்சியில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி 2வது வார்டில் பாஜக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி பெற்றுள்ளார். மற்றபடி வேறு எங்கும் நகராட்சிகளில் பாஜக முன்னிலை வகிக்க்கவில்லை. நகராட்சிகளில் திமுக 32 நகராட்சிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 5 நகராட்சிகளில் முன்னிலை வகிக்கிறது.

பாஜக மாநகராட்சி
மாநகராட்சிகளின் படி பார்த்தால் மொத்தம் 21 மாநகராட்சியில் பாஜக எங்கும் நிலை வகிக்கவில்லை. இங்கு திமுக 7 மாநகராட்சிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக இதுவரை எந்த மாநகராட்சிகளிலும் முன்னிலை வகிக்கவில்லை. மற்றபடி நகராட்சிகளில் வேறு எந்த கட்சிகளும் முன்னிலை வகிக்கவில்லை. அதேபோல் பேரூராட்சிகளில் அமமுக ஒன்றில் முன்னிலை வகிக்கிறது.

இதர கட்சிகள்
திமுகவை தவிர மாநகராட்சியில் வேறு எந்த கட்சியும் முன்னிலை வகிக்கவில்லை. இதுவரை பேரூராட்சிகள்: திமுக- 784; அதிமுக 294; இதர 119 வார்டுகளில் முன்னிலை வகிக்கின்றன. நகராட்சிகள் : திமுக 312; அதிமுக 95; இதர 24 வார்டுகளில் முன்னிலை வகிக்கின்றன. மாநகராட்சிகள்: திமுக 137; அதிமுக 13; இதர 3 வார்டுகளில் முன்னிலை வகிக்கின்றன.












Click it and Unblock the Notifications