முத்து பட ரஜினி போல்! 600கிலோ தங்கத்தை அள்ளிக் கொடுத்த ராஜ குடும்பம்! கடைசி ராணி மரணத்திற்கு பின் நடந்த சோகம்!

Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், கல்வி வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் மிக முக்கியப் பங்களிப்பை வழங்கிய அரச குடும்பங்களில் ஒன்று பீகாரின் தர்பங்கா ராஜ குடும்பம்.

அந்த குடும்பத்தின் கடைசி ராணியான மகாராணி காம்சுந்தரி தேவி காலமானதைத் தொடர்ந்து, இதுவரை பலருக்கும் தெரியாத அக்குடும்பத்தின் வரலாற்றுப் பங்களிப்புகள் தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Maharani Kamsundari Devi death Darbhanga Raj last queen 600 kg gold donation Darbhanga Darbhanga royal family contributions Darbhanga Raj 1962 war gold Maharani Kamsundari Devi Darbhanga Darbhanga airport royal donation Mithila dynasty history Darbhanga Raj educational contributions Kamsundari Devi Kalyani Foundation 600

93 வயதில் காலமான கடைசி ராணி

மகாராணி காம்சுந்தரி தேவி 1932 அக்டோபர் 22-ம் தேதி பிறந்தார். பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள கல்யாணி நிவாஸ் மாளிகையில் 2026 ஜனவரி 12ஆம் தேதியன்று தனது 93 வயதில் அவர் இயற்கை எய்தினார். தர்பங்கா ராஜ குடும்பத்தின் கடைசி ராணி இவர் என்பதால் இவருடைய மரணம் மிதிலா வம்சத்தின் கலாச்சாரம், பழங்கால ஆவணங்கள் மற்றும் சமூக சேவையில் அவர்களது பங்கீடு மீண்டும் இந்திய மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

காம்சுந்தரி தேவி மறைந்து 4 மாதங்களுக்கு பின்பு, தர்பங்கா ராஜ குடும்பம் இந்தியாவுக்குச் செய்த பங்களிப்புகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. குறிப்பாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

600 கிலோ தங்கம் தானம்

1962 இந்திய - சீனப் போர் நடைபெற்றபோது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசிய பாதுகாப்பு நிதிக்கு நாடு முழுவதும் உதவி கோரினார். அந்த சமயத்தில் தர்பங்கா ராஜ குடும்பம் சுமார் 600 கிலோ தங்கத்தை (15 மாண்ட்) தானமாக வழங்கியது. இந்த தங்கம் அந்தக் காலத்தில் மட்டும் அல்ல இந்த காலத்திலும் மிகப்பெரிய தொகையாகும். மகாராஜா காமேஷ்வர் சிங் மறைவுக்குப் பிறகு குடும்பத்தின் சார்பில் இந்த உதவி வழங்கப்பட்டது.

ஒரு மாண்ட் என்பது இந்தியாவில் பழங்காலத்தில் பயன்படுத்தப்படும் எடை அளவு ஆகும். இந்தியாவில் ஒரு மாண்ட் என்பது 37.324 கிலோகிராம் ஆகும். எனவே, தர்பங்கா ராஜ குடும்பம் கொடுத்த 15 மாண்ட் என்பது சுமார் 560 கிலோ தங்கமாகும். துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் 559.86 கிலோ ஆகும்.

இன்றைய மதிப்பில் ஒரு கிலோ 24 கேரட் தங்கம் விலை 1.57 கோடி ரூபாய், அப்படியானால் 560 கிலோ தங்கம் என்பது 879.2 கோடி ரூபாய். தமிழ்நாட்டு முதல்வரின் 624 கோடி ரூபாய் சொத்து மதிப்பை காட்டிலும் அதிகமாகும். தர்பங்கா ராஜ குடும்பத்தின் நன்கொடை இதோடு நிற்கவில்லை.

3 விமானங்கள் தானம்

தங்கம் மட்டுமல்ல, தர்பங்கா ராஜ குடும்பம் சொந்தமாக வைத்திருந்த 3 தனியார் விமானங்களையும், 90 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த விமான தளத்தையும் இந்திய அரசுக்கு தானமாக ஒப்படைத்தது. அந்த நிலம் பின்னர் தர்பங்கா விமான நிலையமாக உருவெடுத்தது. இதன் மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறையிலும் அவர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

Maharani Kamsundari Devi death Darbhanga Raj last queen 600 kg gold donation Darbhanga Darbhanga royal family contributions Darbhanga Raj 1962 war gold Maharani Kamsundari Devi Darbhanga Darbhanga airport royal donation Mithila dynasty history Darbhanga Raj educational contributions Kamsundari Devi Kalyani Foundation 600

கல்வி வளர்ச்சிக்கு செய்த உதவிகள்

தர்பங்கா ராஜ குடும்பம் கல்வியின் மீது அளப்பரிய ஆர்வம் கொண்டிருந்தது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம், லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிலமும், நிதியுதவியும் வழங்கியுள்ளனர். இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் உயர் கல்வி வளர்ச்சிக்கு தர்பங்கா ராஜ குடும்பம் முக்கிய பங்கு வகித்துள்ளது.

மிதிலா பாரம்பரியத்தை காத்த ராணி

மகாராணி காம்சுந்தரி தேவி மிதிலாவின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க தீவிரமாக உழைத்தவர். 1989-ல் அவர் "மகாராஜாதிராஜ் காமேஷ்வர் சிங் கல்யாணி அறக்கட்டளை"யை நிறுவினார். அவரது குடும்ப நூலகத்தில் இருந்த சுமார் 15,000-க்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சியாளர்களுக்கு அளித்து அனைவருக்கும் அறிவு பெறும் வாய்பை உருவாக்கினார்.

பாடப்புத்தகங்களில் இல்லாத வரலாறு?

தர்பங்கா ராஜ குடும்பத்தின் இத்தகைய பெரும் பங்களிப்புகள் இந்திய வரலாற்று பாடப்புத்தகங்களில் இடம்பெறவில்லை என கடைசி மாகராணி காம்சுந்தரி தேவி மறைவுக்கு பின்பு கருத்து நிலவுகிறது. மகாராணியின் மறைவுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பலரும் இந்த குடும்பத்தின் வரலாற்றை முதன்முறையாக அறிந்ததாகப் பதிவிட்டுள்ளனர்.

இந்திய வரலாற்றில் மறக்கப்பட்ட ஒரு அரச குடும்பம்
மகாராணி காம்சுந்தரி தேவியின் மறைவு, சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவை வலுப்படுத்த அமைதியாகப் பங்களித்த பல அரச குடும்பங்களில் தர்பங்கா ராஜ குடும்பம் அவற்றில் முக்கியமான ஒன்று.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+