அடுத்தவங்க கதையை சொல்றீங்களே.. உங்க அப்பா சொன்ன கதை தெரியுமா? விஜய்க்கு சிவசங்கர் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்தவங்க கதையை சொல்றீங்களே.. உங்க அப்பா சொன்ன கதை தெரியுமா? என முதல்வர் விஜய்க்கு சிவசங்கர் சூட்டோடு சூடாக பதிலடி கொடுத்துள்ளார். எஸ் ஏ சந்திரசேகர் சொல்கிறார் என் மகன் என் கட்டுப்பாட்டில் இல்லை.. புஸ்சி ஆனந்த் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்து இருக்கிறார் என்றும், முதலில் உங்கள் குடும்பத்தை நீங்க பாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் விஜய், குட்டிக் கதை ஒன்றை கூறினார். ஒரு ஊருல பெரியவர் வெயில் அதிகமாக இருப்பதாக தெரிவித்து கண்ணில் கைவைத்து தேடிக்கொண்டு இருந்தார்.

Sivasankar Hits Back at Vijay - You Talk About Others Stories Do You Know What Your Father Said

விஜய்க்கு சிவசங்கர் பதிலடி!

அருகில் இருந்த சிறுவன் ஒருவன் என்ன தேடுறீங்க என்று கேட்க, அந்த பெரியவர், உங்க அப்பா இங்கதான் இருப்பாருன்னு சொன்னங்க.. அவரைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன். உங்க அப்பாவைக் காணோம்" என்று கூறிவிட்டு எங்களுக்கும் இதேபோல, நக்கலும் நையாண்டியும் பண்ண தெரியும் என திமுகவை மறைமுகமாக சாடினார்.

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வியை விமர்சித்து முதல்வர் விஜய் இவ்வாறு பேசிய நிலையில், திமுக தரப்பில் இருந்து காட்டமாக பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்தார்.

சந்திரசேகரே சொல்கிறார்

சிவசங்கர் கூறியதாவது:- அப்பா குறித்து குட்டிக் கதை சொல்கிறார்.. வழக்கமாக தேர்தல் பிரசாரத்தில் குட்டிக் கதை சொல்வார்.. பட ரிலீஸின் போதும், திரைப்பட பாடல் ரிலீஸின் போதும் தான் குட்டிக் கதை சொல்வார்.. இன்னைக்கும் குட்டிக் கதை சொல்கிறார். அப்பா கதை.. அப்பாவிடம் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பதை உங்க அப்பாவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். எஸ் ஏ சந்திரசேகர் சொல்கிறார் என் மகன் என் கட்டுப்பாட்டில் இல்லை.. புஸ்சி ஆனந்த் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்து இருக்கிறார்.

இது குறித்து நீங்க எதுவும் சொல்லவில்லை. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல.. கணவரை காணவில்லை என மனைவி செங்கல்பட்டில் வழக்கு போட்டிருக்கிறார்.. அப்பாவை காணாமல், மகனும், மகளும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்க அதையெல்லாம் விட்டுவிட்டு.. அடுத்தவங்க அப்பாவுக்கு கதை சொல்கிறீர்கள். ஆனால் எங்கள் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், ராமதாஸ் சொன்னார் "மகனாக இருந்தால் மு.க ஸ்டாலின் போல் இருக்க வேண்டும் என்று.." தமிழகத்தில் உள்ள படிக்கின்ற குழந்தைகள் அவரை எப்படி அழைத்தார்கள் என்று மக்களுக்கு தெரியும்.

முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள்

எங்களுக்கு அறிவுரை கூறும் வேலையை முதல்வர் விஜய் முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலில் உங்கள் குடும்பத்தை நீங்க பாருங்கள்.. அடுத்தவர்களை குறை சொல்வதை குறைத்து கொள்ளலாம். உங்களது டைவர்சன்ஸ் அரசியல் மூலமாகவே ஆட்சியை நடத்திவிடலாம் என நினைத்தால் அதனை பொதுமக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். உங்களுக்கு வாக்களித்த 35 சதவீதம் பேரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.. உங்களுக்கு வாக்களிக்காத 65 சதவீதம் பேரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாங்க.. எனவே திமுக மீது பழி போடாமல் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காவது எதையாவது செய்யுங்கள்.." என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+