முதல்வர் விஜய்யுடன் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடிய திரிஷா.. இன்ஸ்டாவில் பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜய்க்கு முதல் ஆளாக நடிகை திரிஷா பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். நள்ளிரவு 12 மணிக்கு விஜய்யுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை திரிஷா தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எல்லாவற்றையும் மதிப்புக்குரியதாக மாற்றும் நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

தவெக தலைவரும் முதல்வருமான விஜய் நேற்று தனது 52 வது பிறந்த நாளை கொண்டாடினார். விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

Trisha Becomes First Celebrity to Wish CM Vijay on His Birthday Midnight Celebration Photo Goes Viral

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து

தவெக தொண்டர்களும் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கினர். விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகூறிய நிலையில், அவரது நெருங்கிய தோழியும் பிரபல நடிகையுமான திரிஷா வாழ்த்து எதுவும் நேற்று கூறவில்லை. இது சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.

ஏனெனில், சமீபகாலமாக திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக பங்கேற்று வந்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளுக்கு வாழ்த்து எதுவும் கூறாதது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. விஜய்யின் கடந்த பிறந்த நாளுக்கு முதல் ஆளாக வாழ்த்து கூறியிருந்த திரிஷா, இந்த பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறாமல் இருந்ததால், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதா? என்று கூட விஜய் ரசிகர்கள் வலைத்தளங்களில் விவாதித்தனர்.

திரிஷா போட்ட போஸ்ட்

இன்ஸ்டகிராமிலும் விஜய்யை திரிஷா அன்பாலோ செய்ததாக பலரும் பதிவிட்டு வந்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளை நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டிகொண்டாடிய காட்சிகளை திரிஷா பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் எல்லாவற்றையும் மதிப்புக்குரியதாக மாற்றும் நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கூறி கேக் வெட்ட விஜய் தயாராக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். திரிஷாவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விஜய்யுடன் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்கும் திரிஷா

சமீப காலமாக விஜய்யுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக திரிஷா பங்கேற்று வருகிறார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கல்பாத்தி சுரேஷ் இல்ல திருமண விழாவில் நடைபெற்ற விஜய்யும் திரிஷாவும் ஒரே காரில் வந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கடந்த மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியான நிலையில், தவெக முன்னிலை பெற்றதும் முதல் ஆளாக விஜய்யின் பனையூர் வீட்டிற்கே சென்று திரிஷா வாழ்த்து கூறிவிட்டு சென்றார்.

அதேபோல நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிலும் பங்கேற்று இருந்தார். அதேபோல நடிகர் அஜித்தின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்த விஜய் வந்து இருந்தார். அதே நேரத்தில் திரிஷாவும் அங்கு வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+