ஒரே நாளில் சாதனை.. 3.26 லட்சம் பேருக்கு வேக்சின்.. தமிழ்நாடு அரசு செம "பாஸ்ட்".. எப்படி சாத்தியமானது
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 3.26 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வேக்சின் இறக்குமதி செய்யப்பட்டவுடனே அந்த வேக்சின் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வேக்சின் போட்டுக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். போதிய அளவு வேக்சின் மத்திய அரசிடம் இருந்து ஏற்றுமதி செய்யப்படவில்லை என்றாலும், வேக்சின் கிடைக்க கிடைக்க உடனே அதை மக்களுக்கு தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது.
புனேவில் இருந்து மாலையில் வேக்சின் டெலிவரி செய்யப்பட்டால், அன்று இரவே அந்த வேக்சின் தமிழ்நாடு முழுக்க மாவட்ட வாரியாக பிரித்து கொடுக்கப்படுகிறது. இதனால் தினசரியாக இறக்குமதி செய்யப்படும் வேக்சின்கள் உடனே காலியாகிவிடுகிறது.

எவ்வளவு
தமிழ்நாட்டில் நேற்றோடு 1 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டது. புனேவில் இருந்து கூடுதலாக இன்று 3 லட்சத்து 65 ஆயிரம் கோவிஷீல்ட் வேக்சின் டோஸ்கள் நேற்று முதல் நாள் வந்தது. நேற்றும் புனேவில் இருந்து 10 லட்சம் தமிழ்நாட்டிற்கு வந்தது. இந்த 13.65 லட்சம் டோஸ்களும் உடனே தமிழ்நாடு முழுக்க பிரித்து கொடுக்கப்பட்டது.

பிரித்து தரப்பட்டது
நேற்று வந்த 10 லட்சம் தடுப்பூசிகளில் 6 லட்சம் டோஸ் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டது. 1.30 லட்சம் டோஸ் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டது. மீதம் உள்ள தடுப்பூசிகள் சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளது. இன்று இந்த வேக்சின் மாநிலம் முழுக்க நாளை கொடுப்பதற்காக அனுப்பி வைக்கபப்டும்.

நேற்று எவ்வளவு
அந்த வகையில் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 3.26 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி மருந்துகளை பிற பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதில் எந்த தாமதமும் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். இதன் மூலம் ஒரே நாளில் வேக்சின் செலுத்துவதில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது.

எப்படி சாத்தியமானது?
ஒரே நாளில் தமிழ்நாட்டில் போடப்பட்ட மிக அதிகமான வேக்சின் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு சிறு சிறு முகாம்கள், வேக்சின் கேம்ப் எல்லாம் நடத்தப்பட்டு இவ்வளவு வேக்சின் வேகமாக மக்களுக்கு போடப்பட்டது. பல்வேறு முகாம்களில் நேற்று பெரிய அளவு கூட்டம் அலைமோதியது. வேகமாக வேக்சினை மாவட்டங்களுக்கு அனுப்பி, பல்வேறு முகாம்களை நடத்தியதன் மூலம் இது சாத்தியமாகி உள்ளது.

கூட்டம்
மக்கள் வேக்சின் போட்டுக்கொள்வதில் ஆர்வம் செலுத்தினார்கள். ஆனால் போதிய அளவில் மத்திய அரசிடம் இருந்து வேக்சின் வழங்கப்படுவது இல்லை என்பதால் இருக்கிற வேக்சினை மாவட்ட வாரியாக பிரித்து கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று மாலை வரை 1.03 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications