இன்னும் 5 மி.மீ. மழைதான்.. பெய்தால் நவம்பர் 2015 ரெக்கார்டை பிரேக் செய்யலாம்.. வெதர்மேன்!
சென்னை: சென்னையில் இன்றைய நிலவரப்படி 1247 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அவற்றில் 216 மி.மீ. மழை அக்டோபர் மாதமும் 1031 மிமீ மழை நவம்பர் மாதமும் பெய்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட ட்வீட்டில் நுங்கம்பாக்கத்தில் அதாவது சென்னை நகரில் 1247 மி.மீ. மழை நவம்பர் 29ஆம் தேதி வரை பதிவாகியுள்ளது. அதில் 216 மி.மீ.மழை அக்டோபர் மாதத்திலும் 1031 மி.மீ. மழை நவம்பரிலும் பெய்துள்ளது என்றார்.
மேலும் அவர் பாலோயர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார். மழையானது டிசம்பர் 1ஆம் தேதி வரை விட்டுவிட்டு பெய்யும். பழைய மகாபலிபுரம் சாலையில் காலவாக்கத்தில் நிறைய மேகக் கூட்டங்கள் உள்ளன. இதனால் 15 முதல் 20 நிமிடத்திற்கு நல்ல மழை பெய்யும்.

கேளம்பாக்கம்
மாம்பாக்கம், கேளம்பாக்கத்தில் இந்த முறை நல்ல மழை பெய்யும். இன்னும் 5 மி.மீ. மழை பெய்தால் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையின் அளவை முறியடித்துவிடலாம் என்றார் பிரதீப்ஜான். கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த 1049 மி.மீ. மழை அளவை முறியடிக்க நுங்கம்பாக்கத்திற்கு வெறும் 29 மி.மீ. மழை தேவைப்படுகிறது. அது போல் 1918 ஆம் ஆண்டு பெய்த 1089 மி.மீ. மழை பொழிவை முறியடிக்க 69 மி.மீ. மழை பெய்தால் போதும் என்று டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

2020
நவம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை எத்தனை மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்பது குறித்து இந்திய வானிலை மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. அதன்படி 2011-ஆம் ஆண்டு 457.2 மி.மீ மழையும் 2012-ஆம் ஆண்டு 47 மி.மீ. மழையும் 2013 ஆம் ஆண்டு 193.7 மி.மீ.மழையும் 2014-ஆம் ஆண்டு 196.9 மி.மீ. மழையும் 2015ஆம் ஆண்டு 1049.3 மி.மீ. மழையும் 2016 ஆம் ஆண்டு 50.5 மி.மீ. மழையும் பெய்துள்ளது. அது போல் 2017ஆம் ஆண்டு 617.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

2020ஆம் ஆண்டு
2018ஆம் ஆண்டு 190.7 மி.மீ. மழையும் 2019- ஆம் ஆண்டு 108.2 மி.மீ. மழை பெய்துள்ளது. அது போல் கடந்த ஆண்டு 525.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மாதத்தின் மழை பதிவு இந்த மாதம் முடிந்தவுடன் கணக்கிடப்பட்டு டேட்டா பேஸில் ஏற்றப்படும் என தெரிகிறது.

வடமேற்கு திசை
வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது வடமேற்கு திசையை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடந்த இருதினங்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே!












Click it and Unblock the Notifications