சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புயல் கண்ணின் முதல் பாதி கடக்கும்போது ஒருவித அமைதி நிலவும்.. பின்னர் பலத்த காற்று வீசும்.. வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: டையு அருகே வெராவலுக்கும் மஹுவாவுக்கும் இடையே டவ் டே புயலின் கண்ணின் முதல் பாதி கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ் தே புயலானது அதி தீவிர புயலாக மாறியது. இது குஜராத் அருகே கரையை கடக்கத் தொடங்கியது. இதன் தாக்கத்தால் மகாராஷ்டிராவில் மழை வெளுத்து வாங்கியது.

தமிழகத்தில் குறைய தொடங்கிய கொரோனா.. ஆனால் அதிகரிக்கும் உயிரிழப்பு.. 14 வயது சிறுவன் உட்பட 335 ​பலிதமிழகத்தில் குறைய தொடங்கிய கொரோனா.. ஆனால் அதிகரிக்கும் உயிரிழப்பு.. 14 வயது சிறுவன் உட்பட 335 ​பலி

ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இந்த நிலையில் காற்றின் வேகமும் அதிகமாக வீசி வருகிறது.

டவ் தே புயல்

டவ் தே புயல்

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் டவ் தே புயலின் கண்ணின் முதல் பாதி டையு அருகே வெராவலுக்கும் மஹுவாவுக்கும் இடையே கரையை கடக்கும். முழுமையாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் ஆகும். மையத்திற்கு வரும் போது சிறிய அமைதி இருக்கும். எனவே புயல் கரையை கடந்து விட்டதாக கருதி வெளியே வரவேண்டாம். அதன் பிறகு எதிர் திசையில் அதாவது தென் கிழக்கு பகுதியில் பலத்த காற்று வீசும். இது மிகவும் மோசமான நிலையாகும். மும்பையில் இரவுக்கு பிறகு படிப்படியாக மழை குறையும்.

வலுவிழந்த மரங்கள்

வலுவிழந்த மரங்கள்


ஏற்கெனவே மரங்கள் வலுவிழந்து காணப்படுகின்றன. இவையெல்லாம் காற்றின் வேகத்தால் எதிர்திசையில் விழும். கொலாபாவில் மணிக்கு 102 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. 1940 ஆம் ஆண்டு,1948 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலின் போதும் 2020 ஆம் ஆண்டு நிசர்கா புயலின் போதும் 2021 ஆம் ஆண்டு டவ் தே புயலின் போது இது போல் அதிக காற்று மும்பையில் வீசியுள்ளது.

மழை

மழை

பருவமழையாலும் இடி மழையாலும் ஏற்படும் காற்று சில நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும். ஆனால் புயலினால் ஏற்படும் காற்று மணிக்கணிக்கில் நீடிக்கும். இந்த புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 190 முதல் 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இது வரை குஜராத்தில் கடந்த காலங்களில் இரு முறை மட்டும் 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

வலிமையான புயல்

வலிமையான புயல்

இந்த புயல் மிகவும் வலுவான புயலாகும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மும்பை விமான நிலையம் இரவு 10 மணி வரை மூடப்பட்டுவிட்டது. மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

English summary
Tamilnadu Weatherman Pradeep John says that the first half of the eye wall will close to Diu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X