சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் இரு நாட்களாக பெய்த அடை மழை.. நெக்ஸ்ட்?.. ரெஸ்ட்தான்.. அதுவும் 10 நாட்களுக்கு.. வெதர்மேன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Cyclone Maha : அரபிக் கடலில் இன்னொரு புயல் உருவானது... பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    சென்னை: சென்னையில் 10 நாட்களுக்கு மழை இருக்காது என்றும் இதே நிலைதான் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இத்தனை நாட்களாக வறட்சியின் பிடியில் இருந்த தமிழகம் தற்போது மகிழ்ச்சியில் உள்ளது.

    அரபிக் கடலில் இரு புயல்கள் உருவாகி மிரட்டி வருகின்றன. கியார் புயலானது கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு மழையை கொடுக்கிறது. அரபிக் கடலில் புயல் உருவானாலும் தமிழகத்திலும் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.

    அரபிக் கடலில் மையம் கொண்ட கியார், மகா புயல்கள் ஓமனை நோக்கி நகருகின்றன!அரபிக் கடலில் மையம் கொண்ட கியார், மகா புயல்கள் ஓமனை நோக்கி நகருகின்றன!

    மஹா புயல்

    மஹா புயல்

    இன்னொரு புயலுக்கு மஹா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை ஓமன் நாடு சூட்டியுள்ளது. இந்த புயல் அரபிக் கடலில் கன்னியாகுமரி கடலோர பகுதியில் உருவாகியுள்ளது. இதனால் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரியில் மழை

    நீலகிரியில் மழை

    இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் குறிப்பாக நீலகிரியில் இன்று நல்ல மழை பெய்யும். அரபிக் கடலில் புயல் உருவானாலும் நீலகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளது. பின்னர் அந்த மழை படிப்படியாக குறையும்.

    10 நாட்களுக்கு மழையில்லை

    10 நாட்களுக்கு மழையில்லை

    சென்னையில் அங்கும் இங்குமாக எங்காவது ஓரிரு இடங்களில் மழை பெய்யும். ஒட்டுமொத்தமாக பார்த்தோமேயானால் சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு மழை இருக்காது.

    மழை இருக்காது

    மழை இருக்காது

    அது போல் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை இருக்காது. தமிழகத்தில் அதிகபட்சமாக கொடநாட்டில் 142 மி.மீ மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக பாரிமுனையில் 10 மி.மீ. மழை பெய்துள்ளது.

    English summary
    Tamilnadu Weatherman says that here will be some isolated rains in Chennai but overall we are going in for a break in rains in the City for next 10 days. So a big break for KTC ahead.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X