Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடை வெயிலுக்கு "குட்பை" சொல்லுங்க.. அடுத்த 5 நாட்களுக்கு மழையாம்.. "குடை" மறக்காதீங்க மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை மழை ஒரு வழியாக முடிந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக நம்மை வைத்துச் செய்து வந்த கோடைக் காலம் ஒரு வழியாக முடிந்துவிட்டது.. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை கோடை வெயில் உச்சத்தில் இருந்தது.

இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லவே சிரமப்பட்டனர். இப்போது கோடைக் காலம் முடிந்து, பருவ மழை தொடங்கும் நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வானிலை: இதற்கிடையே வானிலை மையம் வரும் நாட்களில் வானிலை குறித்து செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை பெரும்பாலான இடங்களில் பரவியுள்ளது... நேற்று (10.06.2023) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத் தீவிர புயல் "பிப்பர்ஜாய்" வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (11.06.2023) காலை 05:30 மணி அளவில் அதி தீவிர புயலாக வலுப்பெற்றது.

இப்போது அந்த புயல் போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 460 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று, 14.06.2023 காலை வரை வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில், 15.06.2023 அன்று 1130-1430 மணி அளவில் மிகத் தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்) - மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) கடற்கரை பகுதிகளில் கடக்கக்கூடும்.

அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை எங்கே: மேலும், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (ஜூன் 12) முதல் வரும் ஜூன் 14ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல வரும் ஜூன் 15ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் அடுத்து இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மேலும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

Tamilnadu will receive rain for next five days says Chennai Meteorological dept

சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், குன்றத்தூர் 50 மிமீ, திருப்பத்தூர், ஊத்துக்கோட்டை, செம்பரம்பாக்கம், காரைக்குடி தலா 30 மிமீ மழை பெய்துள்ளது. மேலும், அரபிக் கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் அதிக வேகத்தில் காற்று வீசும் என்பதால் அதில் பல்வேறு பகுதிகளைக் குறிப்பிட்டு மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று கூறப்பட்டுள்ளது.. மேலும், ஏற்கனவே அரபிக்கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+