இன்றும் நாளையும் தமிழகத்தில் செம மழை இருக்கு.. எங்கெல்லாம் பெய்யும் தெரியுமா? வானிலை மையம் கணிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தீவிரமாக மழை பெய்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் தீவிரமாக மழை பெய்வதால், காவிரியில் நீர் வரத்தும் அதிகரித்து உள்ளது.

அடுத்த இரண்டு நாட்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, சேலம், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்கள்
அதேபோல் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலில் காற்று தீவிரமாக வீசும். பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சென்னை நிலைமை
ஆனால் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் நாள் முழுக்க வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை நேரத்தில் லேசான சாரல் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நன்றாக காற்று வீசும். பெரிய அளவில் மழையை எதிர்பார்க்க முடியாது.

டெல்டா மாவட்டங்கள்
தமிழகத்தில் இன்னும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. இன்னும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. டெல்டா மாவட்டங்களுக்கு காவிரியில் நீர் வரத்து அதிகரிக்கும். வரும் நாட்களில் அங்கு மழை பெய்ய தொடங்கும். இந்த மாத இறுதியில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கும்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications