தீவிரம் அடைந்த தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தில் இங்கெல்லாம் இன்று மழை பெய்யும்.. முழு விபரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Weather Update | தீவிரம் அடைந்த தென்மேற்கு பருவமழை..எங்கெல்லாம் மழை பெய்யும்?

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் தென் மேற்கு பருவக்காற்று தீவிரமாக வீசி வருகிறது. இன்னொரு பக்கம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.

    கடந்த 3 நாட்களாக இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

    நேற்று எங்கே

    நேற்று எங்கே

    நேற்று தமிழகத்தில் திருச்சி , தஞ்சாவூரில் நல்ல மழை பெய்தது. திருச்சியில் இரவு முழுக்க நல்ல மழை பெய்தது. தேனி, தென்காசி மாவட்டங்களில் சாரல் மழை பெய்தது. கன்னியாகுமரியில் இரவு நேரத்தில் லேசாக சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் சில இடங்களில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

    இன்று எப்படி

    இன்று எப்படி

    இந்த நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும். திருவாரூர், திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். மதியத்திற்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது .

    வேறு எங்கு

    வேறு எங்கு

    விழுப்புரம், புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். கேரளாவிலும் இன்று நல்ல மழை பெய்யும். சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. சென்னையில் மாலைக்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    காற்று வேகம்

    காற்று வேகம்

    கேரளாவை ஒட்டி இருக்கும் தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலுக்கு செல்வது ஆபத்தானது. அதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+