மின்சார வாரியம் அசத்திட்டாங்க.. எத்தனை காலமாக மக்கள் கஷ்டப்பட்டு இருப்பாங்க.. வந்தது சூப்பர் வசதி
சென்னை: தமிழ்நாட்டு மின்சார வாரியம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மக்களுக்கு ஏற்படும் முக்கியமான பாதிப்பு ஒன்று தொடர்பாக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏகப்பட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. உதாரணமாக தமிழ்நாட்டில் வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது. பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
வாட்ஸ்ஆப்பில் TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை ✅ குறியீடு, இருக்கும். எண் 94987 94987 என்பதை உறுதி செய்து கட்டணம் செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணில் இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் என்ற ஆப்ஷன் வரும். அதில் கிளிக் செய்தால் நம்முடைய கட்டணம் காட்டும்.
இதில் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்த முடியும்.
இன்று அறிவிப்பு; இந்த நிலையில் நேற்று முக்கியமான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் அணைத்து இணைய சேவைகளும் இப்போது புதிய இணையதள முகவரிக்கு மாற்றப்பட்டு உள்ளது. http://app1.tangedco.org/nsconline/ என்ற முகவரிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
அதோடு இல்லாமல் மின் கம்பங்களை அகற்ற இணைய முகவரி வழங்கப்பட்டு உள்ளது. https://app1.tangedco.org/nsconline/mobval.xhtml?apl=DCW3 என்ற இணைய முகவரியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வீட்டின் மேலே செல்லும் மின் கம்பிகள், வீட்டு மனை / நிலத்தில் உள்ள மின் கம்பங்களை இடமாற்ற இந்த மெயிலில் தகவல் அளிக்கலாம். இதன் பின் உடனே TANGEDCO அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு பணிகளை செய்வார்கள்.
முன்னதாக tangedco பழைய முகவரியில் கட்டணம் செலுத்துவது தொடங்கி பல சேவைகள் கடினமாக இருந்தன. அவை மெதுவாக இயங்கின. இப்போது அது மொத்தமாக மாற்றப்பட்டு புதிய சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இனி ஒரே இடத்தில் மக்கள் அனைத்து சேவைகளையும் மேற்கொள்ள முடியும்.
மின்சார வாரியம்: இது போக தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்க கூடிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது.
இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இனி கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லையென்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி வெளியான அறிவிப்பு இந்த மாதம் நடைமுறைக்கு வருகிறது,
புதிய முறை; இது போக மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு (UG) வசூலிக்கப்படும் அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படி புகார்கள்; எழுந்ததையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) உடனடியாக அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் கணக்கில் அதைத் திருப்பிச் செலுத்தி அவர்களின் அடுத்தடுத்த பில்களுடன் சரிசெய்துகொள்ளவும் என்று உத்தரவிட்டுள்ளது மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் மின்கட்டணம் குறைவாகவும், நிலத்தடி கேபிள்களுக்கு (UG) அதிக மேம்பாட்டு கட்டணமும் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications