சூப்பர் சர்ப்ரைஸ்.. அடிக்கடி கரண்ட் போகுதா.. தமிழக அரசு சொன்ன நம்பிக்கையை பாருங்க.. ஹப்பாடா நிம்மதி
சென்னை: தடையில்லா மின்சாரம் தமிழகமெங்கும் வழங்கப்படும் என்று தமிழக அரசு உறுதி தந்துள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களும் வெளியாகி உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, மின்தேவை என்பது, தினமும் காலை மாலையில் சராசரியாக 15000 மெகா வாட்டாகவும், மற்ற நேரங்களில் 14000 மெகா வாட்டாகவும் உள்ளது. ஆனால், இவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைப்பதில்லை.. அதனாலேயே மத்திய மின் நிலையங்கள், தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

கரண்ட் பிரச்சனை: கடந்த கோடையில் மின்தேவை அதிகமாக இருந்தது.. 19387 மெகா வாட்டாக மின்தேவை அதிகரித்த நிலையில், தமிழக அரசு மிரண்டுவிட்டது. எனினும், கரண்ட் பிரச்சனை அவ்வளவாக ஏற்படாதவாறு, பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்தது.
வரும் ஜனவரியில், மின் தேவையை பூர்த்தி செய்வதில் 2350 மெகா வாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்படும் என்று மத்திய அரசு வார்னிங் தரவும், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) கூடுதல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது.. அதனால்தான், தற்போது மின்தேவையை ஓரளவு சமாளித்து வந்ததுடன், மின்தேவையும் தமிழகத்தில் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
பருவமழை: பருவமழையும், பண்டிகை கால விடுமுறையும் சேர்ந்து இந்த மின்தேவையை குறைத்திருக்கிறதாம். நம் மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையானது, சராசரியாக 14,000 மெகாவாட் ஆக இருந்த நிலையில், தற்போது 10,000 மெகாவாட்டாக குறைந்துள்ளதாம்.. வழக்கமாக, சராசரி மின் பயன்பாடு 320 மில்லியன் யூனிட்டாக இருக்குமாம். ஆனால், இந்த முறை தீபாவளிக்கு 212.27 மில்லியன் யூனிட் மட்டுமே செலவாகி உள்ளதாம்.
எனவே, வரும் ஜனவரி மாதம் மட்டுமல்ல, அடுத்த சில மாதங்களில் தொடங்கவிருக்கும் கோடை காலத்திலும்கூட, தடையற்ற மின்சாரம் வழங்குவதில் தமிழக அரசுக்கு எந்தவித சிக்கலும் வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னரசு: அதற்கேற்றவாறு, தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு நம்பிக்கை வார்த்தை தந்திருக்கிறார்.. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்நிலையில் மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல, பிறகு, மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் (SLDC) மற்றும் சென்னை மின் பகிர்மான கட்டுப்பாட்டு மையம்(SCADA) தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் சீரான மின் விநியோகம் தொடர்பாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
நம்பிக்கை: மிக கனமழை காரணமாக ஏற்படும் மின் சேதாரங்களை போர்கால அடிப்படையில் துரிதமாகச் சரி செய்யப்படுவதற்காகவும், சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டும், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கும், வட்டத்திற்கு 10 லட்சம் வீதம் மொத்தமாக 4.4 கோடி நிதியினை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அவர் சொல்லும்போது, "வடகிழக்கு பருவமழையின் காரணமாக இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த 169 மின் கம்பங்கள் மற்றும் 72 மின்மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து சேதங்களும் துரித முறையில் சரி செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.. பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசும்போது, "வடகிழக்கு பருவமழையின் காரணமாக இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த 169 மின் கம்பங்கள் மற்றும் 72 மின்மாற்றிகளை உடனடியாக சீரமைக்க ரூ.4.4 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications