உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்.. தமிழக அரசுக்கு நிதிச்சுமை! ஆனாலும் சமாளிக்கலாம்.. ப.சி கொடுத்த ஐடியா!
சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கும் வகையில் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில்,தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என மத்திய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
2003 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பங்களிப்பு ஓய்வூதியம் எனும் புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 22 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நேற்று தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற புதிய ஓய்வு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்
அதன்படி 25 லட்சம் ரூபாய் வரை பணிக்கொடையோடு, இறுதி சம்பளத்தில் 50 சதவீத முறை ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என மத்திய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) முழு விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவு;
ப.சிதம்பரம் கருத்து
ஆனால் நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே. தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் (State Own Tax Revenue) சுமார் 21-22% ஓய்வூதியத்திற்குச் செலவாகும் என்பது கணிப்பு. சொந்த வரி வருவாயைப் பெருக்குவதில் அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும். திட்டச் செலவுகளில் மதிப்பீட்டை மிகாமல் பணிகளை முடிக்க வேண்டும். சிக்கனம் முக்கியம். செம்மையான நிதி மேலாண்மையை அரசின் தாரக மந்திரமாக அரசின் எல்லாத் துறைகளும் கடைப்பிடிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
TAPS
மேலும்," எந்தப் பிரச்னையையும் திறந்த மனதோடும் நல்லுணர்வோடும் அணுகினால் ஓர் இணக்கமான தீர்வைக் காண முடியும் என்பதற்குத் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) ஒரு சிறந்த சான்று" என தெரிவித்துள்ளர்.
அரசு அலுவலர்கள்
முன்னதாக முதல்வர் ஸ்டாலில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிவித்த உடனேயே வரவேற்ற ப.சிதம்பரம்," அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பெரிதும் விரும்பிய கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், ஒய்வூதிய நிதியத்திற்குத் தேவையான பயனாளிகளின் 10% பங்களிப்பு -- ஆகிய இரண்டு முக்கிய கருத்துக்களைக் கொண்டு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம் (TAPS) வரையப்பட்டுள்ளது.
ஓய்வூதிய நிதி
அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் அரசின் நோக்கத்தை
நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் ஓய்வூதிய நிதியத்திற்குப் பயனாளிகளின் பங்களிப்பு அவசியம் என்பதை ஏற்றுக் கொண்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன். மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) விட தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) சில அம்சங்களில் கூடுதலான சலுகைகளை அளிக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது" என தெரிவித்திருந்தார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications