தமிழகத்தை உலுக்கிய கொடூரம்.. தரமணி கல்லூரி வளாகத்தில் மயான அமைதி! நேரில் விசிட் செய்த ஒன் இந்தியா!
சென்னை: சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வடமாநில இளைஞரும் அவரது குடும்பத்தினரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த கொடூரம் நிகழ்ந்த வளாகத்தில் ஒன்இந்தியா தமிழ் தற்போதைய சூழலை வெளிச்சம் போட்டி காட்டி இருக்கிறது. கல்லூரி அமைந்திருக்கிறது என்ற சுவடே தெரியாமல் மயான அமைதி நிலவுவதாக சொல்கின்றனர் மாணவர்கள்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்த மூவரைக் கொன்ற கொடூர சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனமாக இருக்க வேண்டிய ஒரு வளாகத்தில், மனிதநேயத்தை உறைய வைக்கும் வகையில் நிகழ்ந்த இந்த கொலைகள், மாநில அளவில் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார், அவரது மனைவி மற்றும் அவர்களது 2 வயது குழந்தை ஆகிய மூவரும், தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்குள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்து, அந்த பகுதி முழுவதும் பதற்றமும், மௌனமும் கலந்த ஒரு சூழல் நிலவி வருகிறது.
மதுபோதையில் இருந்த ஒரு கும்பல், கவுரவ் குமாரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. அந்த கொடூர செயலை தடுக்க முயன்ற கணவர் கவுரவ் குமாரும், அந்த கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதோடு மட்டும் அல்லாமல், இரண்டு வயதே ஆன அவர்களது குழந்தையையும், தரையில் அடித்து கொன்றதாக கூறப்படும் தகவல், சமூகத்தை உறைய வைத்துள்ளது. எந்த தவறும் அறியாத ஒரு குழந்தை கூட இந்த கொடூர வன்முறையிலிருந்து தப்பவில்லை என்பதே, இந்த சம்பவத்தின் பயங்கரத்தன்மையை காட்டுகிறது. கல்லூரி வளாகம் போன்ற இடத்தில் இத்தகைய சம்பவம் நடந்தது எப்படி? பாதுகாப்பு ஏற்பாடுகள் எங்கே? வெளிமாநில தொழிலாளர்கள் அல்லது குடும்பங்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் உருவாகிவிட்டதா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
ஒன் இந்தியா தமிழ் குழு, இந்த கொடூரம் நிகழ்ந்த தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேரில் ஆய்வு செய்த போது, அங்கு வழக்கமான கல்வி நிறுவன சூழல் இல்லை என்பது தெளிவாக தெரிய வந்தது. மாணவர்கள் சிலர் கூறுகையில், "இது கல்லூரி வளாகம் என்று சொன்னால் நம்ப முடியாத நிலை. எங்கும் பாதுகாப்பு இல்லை. சம்பவம் நடந்த பிறகும் கூட அமைதி அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சுடுகாடு மாதிரி மயான அமைதி நிலவுகிறது" என்றனர்.
அந்த காட்சிகளை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்...
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications