டார்கெட் வேக்சினேஷன்.. கலெக்டர்களுக்கு மா.சு முக்கிய உத்தரவு.. வழிபாட்டு தலங்களுக்கு முக்கியத்துவம்!
சென்னை: தமிழ்நாட்டில் பிரபலமான வழிபாட்டு தலங்கள், கோவில்கள் உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் 100% வேக்சின் போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது தினசரி கேஸ்கள் 2100க்கும் கீழ் சென்றுள்ளது. ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் குறைந்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் மக்கள் வேக்சின் போட்டுக்கொள்ளவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இதுவரை 1,95,00,740 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. இதில் 1,60,17,171 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

அரசு திட்டம்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிரபல கோவில்கள் இருக்கும் நகரங்கள், அதிக சுற்றுலா பயணிகள் வரும் புனித தலங்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அதிக அளவு வேக்சின் போட அரசு முடிவு செய்துள்ளது. இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேக்சின் போடும் முடிவில் அரசு உள்ளது. இந்த மாத இறுதிக்குள் இவர்கள் அனைவருக்குக்கும் வேக்சின் போட வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது.

எண்ணிக்கை
கோவில் நகரங்களில், வழிபாட்டு தலங்கள் இருக்கும் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு மக்கள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக இப்போதே இங்கு வசிக்கும் மக்களுக்கு வேக்சின் போட வேண்டும். இவர்களுக்கு வேக்சின் கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

பரவல்
அப்போதுதான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இங்கு மக்கள் அதிகமாக கூட தொடங்கி உள்ளனர். இது இன்னொரு பரவலை ஏற்படுத்த கூடாது. இதனால் கோவில் நகரங்களில் அதிக அளவு வேக்சின் போட சொல்லி இருக்கிறேன், என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரவு
இது தொடர்பாக பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு சென்றுள்ளது. ராமேஸ்வரம், திருவண்ணாமலை, பழனி, வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட கோவில்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் 100% வேக்சின் போட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு சென்றுள்ளது.

அடுத்த கவனம்
பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்கள் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு மட்டும் இந்த உத்தரவு சென்றுள்ளது. இன்னும் 11 நாட்களுக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவு சென்றுள்ளது.இந்த மாத இறுதிக்குள் இங்கு 100% வேக்சினேஷனை முடித்துவிட்டு, வரும் நாட்களில் சுற்றுலாத்தலங்களில் வசிக்கும் மக்களுக்கு வேக்சின் போடும் முடிவில் அரசு உள்ளது.

ஊட்டி
அதாவது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் வசிக்கும் மக்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் 100% வேக்சின் போடப்படும் திட்டத்தில் அரசு உள்ளதாகவும், வேக்சினை டார்கெட் அடிப்படையில் செலுத்த உள்ளோம். எங்கு கேஸ்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதை கணித்து, அந்த பகுதிகளை மட்டும் டார்கெட் செய்து வேக்சின் செலுத்தி வருகிறோம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications