Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜி.. டாஸ்மாக் வழக்கில் திருப்பம்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எழுப்பிய முக்கிய கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஊழல் வழக்குகளை விசாரிக்கவில்லை என்று சந்தேகிக்கும்போது அந்த மாநிலங்களுக்கு அமலாக்கத்துறை செல்லுமா? என்று டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் எழுப்பிய முக்கியமான கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் உறுதி செய்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து எழுப்பிய கேள்விகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் புலனாய்வு அதிகாரிகளான அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் திடீரென சோதனை நடத்தினார்கள். சோதனைக்கு பின்னர், 1,000 கோடி அளவுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியது. டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுலாக வாங்கப்படுவம் விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருவதாகவும், இந்த பணம் மேலிடம் வரை செல்வதாகவும் குற்றச்சாட்டுகளை எழுப்பியது.

Tasmac Case Major question raised by SC CJI P R Kawai regarding the Enforcement Directorate

மதுக்கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, டாஸ்மாக்கின் மூத்த அதிகாரிகளிடம் விசாரணையும் நடத்தியது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க கோரி தமிழக அரசு சார்பிலும், டாஸ்மாக் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சபரீஷ், மிஷா ரோத்தகி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு கடந்த மே மாதம் 22-ந் தேதி விசாரித்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

தமிழக அரசுக்காக கபில்சிபல் வாதம் என்ன

இதற்கிடையே இந்த மனுக்கள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி வாதிடுகையில், "மாநில அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தில் (டாஸ்மாக்) மத்திய அரசின் அமலாக்கத்துறை தலையிடுவது கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது.அமலாக்கத்துறை, பணமோசடியை மட்டுமே விசாரிக்க முடியும். ஊழல் குறித்த மூலக் குற்றங்களை விசாரிப்பது மாநில லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. மாநில லஞ்ச ஒழிப்புத் துறையே 47 வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை அவசியமின்றி தலையிடுவது மாநிலத்தின் விசாரணை அதிகாரத்தை அபகரிப்பதாகும். அமலாக்க வழக்குப் தகவல் அறிக்கை (ECIR) வழங்கப்படாதது சட்ட நடைமுறையின் குறைபாடு" இவ்வாறு வாதிட்டார்,

டாஸ்மாக்கிற்காக முகுல் ரோத்தகி வைத்த வாதம்

இதேபோல் டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, அதிகாரிகளின் செல்போன்களை பறிமுதல் செய்து தகவல்களை நகல் எடுப்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது. அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த அலைபேசிகளில் இருந்த தகவல்களை சட்டபூர்வமான காரணங்கள் இன்றி நகலெடுத்துள்ளனர். இது தனிநபர்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை மீறும் செயல். தனிப்பட்ட அலைபேசியைப் பறிமுதல் செய்து அதில் உள்ள தரவுகளை எடுப்பது, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கியமான சட்டக் கேள்வி ஆகும்.
டாஸ்மாக் ஊழியர்களை 40 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் பிடித்து வைத்திருந்தது போன்ற அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் சட்ட மீறல் மற்றும் அத்துமீறல் ஆகும் " இவ்வாறு வாதிட்டார்

அமலாக்கத்துறை வாதங்கள் என்ன

இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆஜராகி, " மாநில அரசின் சார்பில் கூட்டாட்சி அமைப்பு குறித்த வாதங்கள் முன்வைக்கப்படுவது, பெரிய அளவிலான ஊழலை மறைப்பதற்கான ஒரு முயற்சி. ஊழல், கூட்டாட்சி குறித்த வாதங்களுக்குப் பின்னால் மறைக்கப்பட முயற்சிக்கப்படுகிறது. அமலாக்கத்துறை, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் ஊழலை நேரடியாக விசாரிக்கவில்லை. மாறாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் என்ற அம்சத்தை மட்டுமே விசாரிக்கிறோம். குறிப்பாக நாங்கள் பணமோசடி அம்சத்தை மட்டுமே விசாரிக்கிறோம்.

47 எப்ஐஆர்

பணமோசடி வழக்குகளுக்கு ஆதாரமான ஆரம்பக் குற்றங்கள் இருப்பதற்கு, மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையே பதிவு செய்திருந்த 47 எப்ஐஆர்களே ஆதாரம் ஆகும். இன்னும் தெளிவாக சொல்வது என்றால், ஆரம்பக் குற்றம் நிகழ்ந்ததை மாநில அரசே உறுதி செய்துள்ளதால், அதன் அடிப்படையிலான பணமோசடியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உரிமை உள்ளது.

திடீரென வழக்குகள் மூடல்

சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டம் (PMLA) பிரிவு 17-இன் கீழ், 'சந்தேகப்படுவதற்கான காரணம்' (Reasons to Suspect) இருந்தாலே சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. சோதனைகள் சட்டபூர்வமான முறையில், "அமைப்பாகவும் முறையானதாகவும்" நடத்தப்பட்டன. மாநில அரசு, அமலாக்கத்துறையின் விசாரணையைத் தடுக்கும் நோக்குடன், ஆரம்பக் குற்றங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட 47 FIR-களில், 37 வழக்குகளை குறுகிய காலத்திற்குள் மூடிவிட்டது. ஆரம்பக் குற்றத்துக்கான FIR மூடப்பட்டால், பணமோசடி வழக்கும் நீர்த்துப் போகும். அமலாக்கத்துறையைத் தவிர்ப்பதற்காகவே இந்த முயற்சிகள் நடக்கின்றன என்று வாதிட்டார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

இதனையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், 'மாநில அரசின் அலுவலகத்துக்குள் அமலாக்கத்துறை சோதனை நடத்தினால் கூட்டாட்சி முறை என்ன ஆவது?. சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது யார்?. மாநில உரிமைகளை பறிக்கவில்லையா?. ஊழல் வழக்குகளை விசாரிக்கவில்லை என்று சந்தேகிக்கும்போது அந்த மாநிலங்களுக்கு அமலாக்கத்துறை செல்லுமா? கடந்த 6 ஆண்டுகளில் அமலாக்கத்துறையின் பல வழக்குகளை பார்த்துவிட்டேன். கருத்து கூற விரும்பவில்லை. கருத்து கூறினால் ஊடகங்களில் செய்தியாகிறது' இவ்வாறு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை

பின்னர், நடைபெற்ற விசாரணையில் வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை அதிகாரத்தை உறுதி செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரும் மனுக்கள் மீதான தீர்ப்புக்கு பிறகு டாஸ்மாக், அமலாக்கத்துறையின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதுவரை டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு விதித்த இடைக் கால தடை உறுதி செய்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+