Tasmac open: தமிழகத்தில் மீண்டும் திறந்த டாஸ்மாக் கடைகள் கடைகள்.. குபீர் மகிழ்ச்சியில் குடிகாரர்கள்
சென்னை: தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியுள்ளது. ஆயினும் சென்னை, திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைகளுக்குட்பட்ட டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படவில்லை.
Recommended Video
தமிழகத்தில் 3ஆவது லாக்டவுன் அமலில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியுடன் கடந்த 7-ஆம் தேதி தமிழகத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த கடைகள் திறக்கப்பட்டு இரு நாட்களிலேயே ரூ 250 கோடி லாபம் கிடைத்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது டாஸ்மாக் கடைகளை மூடுமாறும், மதுவை ஆன்லைனில் விற்பனை செய்யுமாறும் ஹைகோர்ட் உத்தரவிட்டது.

இதனால் கடந்த 9ஆம் தேதி, அதாவது திறக்கப்பட்ட இரு நாட்களிலேயே கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
அப்போது இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த விற்பனை மாலை 5 மணியுடன் இருக்கும். கொரோனா தொற்று அதிகமுள்ள சிகப்பு மண்டல பகுதிகள், வணிக வளாகங்கள், மால்கள் தவிர்த்து அனைத்து இடங்களிலும் மதுபான கடைகள் இன்று திறக்கப்படுகிறது.

மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் 7 வண்ணங்களில் டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஒரு கடைக்கு நாளொன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டில் 135 கடைகளில் 11 கடைகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 49 கடைகளில் 13 கடைகளும் என 24 மதுபான கடைகள் திறக்கப்பட்டன. சென்னை, திருவள்ளூரில் கடைகள் திறக்கப்படவில்லை. சிகப்பு, பச்சை, மஞ்சள், நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைக்கு வருவோர் சமூக விலகலை பின்பற்றவும் முகக் கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications