ஆடிப்போய் இருக்கும் ஐடி துறை! TCS பணி நீக்கம் இப்போதைக்கு முடியாது! இந்த 5 விஷயம் ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) கடந்த மூன்று மாதங்களில் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை 6 லட்சத்திற்கும் கீழ் குறைத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அமெரிக்க வர்த்தகக் கொள்கைகளில் உள்ள நிச்சயமற்ற தன்மைகள் இந்திய ஐடி துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், இந்த அதிரடி பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

USA Donald Trump

அக்டோபர் 11, 2025 அன்று வெளியான தகவலின்படி, டிசிஎஸ் நிறுவனம் ஒரே காலாண்டில் 19,755 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான பணிநீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நிறுவனத்தின் மொத்த ஊழியர் பலம் 6 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் பணி நீக்கம்

இந்த பணிநீக்க நடவடிக்கையில், தானாக முன்வந்து வெளியேறிய ஊழியர்களும், நேரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களும் அடங்குவர். கடந்த காலாண்டை விட இது 3.2% குறைவு. இந்த பணிநீக்கச் செலவுகளுக்காக டிசிஎஸ் நிறுவனம் ரூ.1,135 கோடி ஒதுக்கியுள்ளதாக அதன் சமீபத்திய வருவாய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி நீக்கத்திற்கு பின் 5 முக்கியமான விவாதங்கள் வைக்கப்படுகின்றன.

1. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சுதீப் குண்ணுமால், ப்ளூம்பர்க் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், இந்த மறுசீரமைப்பு பெரும்பாலும் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களை இலக்காகக் கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார். திறன் இல்லை மற்றும் தகுதிப் பொருத்தமின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் விளக்கமளித்தார்.

2.டிசிஏ நிறுவனம் தனது உலகளாவிய ஊழியர்களில் 2 சதவீதத்தை மார்ச் 2026-க்குள் குறைக்க திட்டமிட்டுள்ளது. இதில் பாதி வேலைகள் முடிந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி சேவைகளை நோக்கி நிறுவனம் நகர்வதன் ஒரு பகுதியாகவே இந்த மாற்றங்கள் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

ஆய்வாளர்கள் கருத்துப்படி, உலகளாவிய தேவை குறைவு மற்றும் தொழில்நுட்ப பட்ஜெட் குறைப்புகள் காரணமாகவே இந்த பணிநீக்கங்கள் நிகழ்ந்துள்ளன. டிசிஎஸ்ஸின் காலாண்டு லாபம் எதிர்பார்ப்புகளை எட்டாததற்கு, பணிநீக்கத்துடன் தொடர்புடைய செலவுகளே முக்கிய காரணம். மார்ச் மாதத்திற்குள் இந்த recession TCSல் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எச்-1பி விசா கட்டணத்தை $100,000 (சுமார் ரூ.88.7 லட்சம்) ஆக உயர்த்தவும், இந்திய இறக்குமதிகள் மீது அதிக வரிகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ளார். இது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. டிசிஎஸ் மீது நேரடி வரிவிதிப்பின் தாக்கம் குறைவாக இருந்தாலும், நிச்சயமற்ற தன்மையும், அமெரிக்க வாடிக்கையாளர்களின் ஐடி செலவுகள் குறைவதும் கவலையளிப்பதாகக் கூறப்படுகிறது.

4. இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2025-26 நிதியாண்டில் சுமார் 12,000 ஊழியர்களை, அதாவது உலகளாவிய ஊழியர்களில் சுமார் 2% பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான தேவையின் அதிகரிப்பால், நிறுவனம் தற்போது மறுசீரமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

பணிநீக்கங்களைத் தவிர, 2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான டிசிஎஸ்-இன் பணிவிலகல் விகிதம் முந்தைய காலாண்டின் 13.3% ஐ விட, கடந்த பன்னிரண்டு மாதங்களில் 13.8% ஆக சற்று அதிகரித்துள்ளது.

5. இந்திய ஐடி நிறுவனங்கள் கடுமையான சவால்களையும், சிக்கல்களையும் எதிர்கொள்ள தொடங்கி உள்ளன. அமெரிக்காவின் வர்த்தகக் கட்டுப்பாடுகள், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல் மற்றும் மந்தமான வளர்ச்சி போன்ற காரணங்களால் இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், சுமார் 600 பெரிய ஐடி ஒப்பந்தங்கள் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் புதுப்பிக்கப்பட உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 13 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை முறையாக புதுப்பிக்கப்படுமா அல்லது இந்திய ஐடி நிறுவனங்களை விட்டு வெளியேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், HCLடெக் மற்றும் விப்ரோ ஆகியவற்றுக்கு சுமார் 13 பில்லியன் டாலர் (சுமார் ₹114,400 கோடி) மதிப்புள்ள ஒப்பந்தங்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் புதுப்பிக்கப்பட உள்ளன.

2024 ஆம் ஆண்டில் மட்டும் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இந்த ஆண்டு 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி ஒப்பந்தங்கள் புதுப்பிப்புக்காகக் காத்திருந்தன. அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் போன்ற சூழலில் இந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+