சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வடபோச்சே!.. சென்னையில் உள்ள டீக்கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவு..144 தடையால் நடவடிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து டீக்கடைகளையும் மாலை 6 மணியுடன் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துவிட்டது.

Tea shops will be closed from 6pm to avoid social gathering

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடைஉத்தரவு போடப்பட்டது. இதையடுத்து அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன.

அத்தியாவசிய கடைகள் தவிர ஏனைய அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் உணவகங்களிலும் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் மட்டுமே வாங்கிச் செல்லலாம்.

கன்பர்ம்ட்.. கனிகாவுக்கு 3வது டெஸ்ட்டிலும் கொரோனா உறுதி.. அதிர வைத்த சோதனை.. இன்னும் அடங்கலியே அவர்!கன்பர்ம்ட்.. கனிகாவுக்கு 3வது டெஸ்ட்டிலும் கொரோனா உறுதி.. அதிர வைத்த சோதனை.. இன்னும் அடங்கலியே அவர்!

அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள அனைத்து டீக்கடைகளையும் இன்று மாலை 6 மணியுடன் மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளதால் டீக்கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது போல் அரியலூர் மாவட்டத்தில் டீக் கடைகள், பழச்சாறு கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
Teashops in Chennai, Trichy, Ariyalur will be closed from today evening 6 pm to avoid social gathering.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X