மாவட்டச் செயலாளர் பதவி.. காய் நகர்த்தும் திமுக எம்எல்ஏ-க்கள்.. போட்டியை ரசிக்கும் ஸ்டாலின்!
சென்னை: திமுகவில் அமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட இருக்கும் நிலையில், மாவட்டச் செயலாளர் பதவியை பிடிக்க நிர்வாகிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாகவே தவெகவுக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் பலரும் ஆவேசமாக பேசத் தொடங்கி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின் திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட இருக்கிறது. விரைவில் மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவினர், திமுக தலைவர் ஸ்டாலினிடம் பரிந்துரை அறிக்கையை வழங்க இருக்கின்றனர். இதன்பின் செப்டம்பரில் நடக்கும் முப்பெரும் விழாவுக்கு பின் திமுகவில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

குறிப்பாக 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற விதியை கொண்டு வந்து, அதற்கேற்ப நிர்வாகிகளுக்கு பதவியை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக குறுநில மன்னர்களின் ஆதிக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று திமுக தலைமை நம்புகிறது. புதியவர்களுக்கு வாய்ப்பு அளித்தால், அவர்களும் களத்தில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்கள்.
அதற்கேற்ப இளைஞரணி நிர்வாகிகள் அதிகளவில் பொறுப்பை ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மாவட்டங்கள் பிரிக்கப்படும் பட்சத்தில் அந்த பதவியை பிடிக்க திமுகவினர் மத்தியில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தான் எம்எல்ஏக்கள் முதல்வர் விஜய்யை கடுமையாக சாடி வருவதும்.
தாம் கைது செய்யப்படும் பட்சத்தில் அது நேரடியாகவே திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கும் செல்லும் என்று கட்சியினர் நம்புகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தை தெற்கு, வடக்கு மற்றும் மத்தி என்று 3ஆக பிரிக்க திமுக முடிவு செய்துள்ளது. அதில் விளாத்திகுளம் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க மார்க்கண்டேயன் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே தவெகவை கடுமையாக திமுகவினர் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர். அதேபோல் திமுக மேலிடமும் தவெகவுக்கு எதிராக ஆக்ரோஷமாக செயல்படுவோரை ரசிக்கிறது. தேர்தல் தோல்விக்கு பின் பல்வேறு நிர்வாகிகளும் அமைதியாகிவிட்ட சூழலில், சிலர் வீரியத்துடன் செயல்படுவதும் சரியாகத்தான் இருக்கும் என்று பார்க்கிறது.


Click it and Unblock the Notifications
