சோதனை வந்தால் ராகுல் ’டிராவிட்’ மாதிரி இருக்கனும்.. ராகுல் ’காந்தி’ மாதிரி இல்ல..! கலாய்த்த பாஜக!
சென்னை: நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய ஆண்கள் அணி t20 உலக கோப்பையை வென்றிருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை ராகுல் டிராவிட்டை வைத்து கலாய்த்து இருக்கிறது தெலுங்கானா பாஜக. தற்போது அந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..
2011 உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றதற்கு பிறகு ஐசிசி டிராபிகளை இந்திய அணி வெல்ல முடியவில்லை. இதை அடுத்து இந்திய அணி மீது பலத்த விமர்சனங்கள் இருந்தது.

குறிப்பாக கடந்தாண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு தொடர்களை இந்தியா இழந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இந்த நிலையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு போட்டியில் கூட தோற்காத தென்னாப்பிரிக்காவை அதே போல தொடர்ந்து வெற்றியை சந்தித்து வந்த இந்திய அணி தோற்கடித்து கோப்பையை வென்று இருக்கிறது. நேற்று நடந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுளையும் இழந்து 164 மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் விராட் கோலி அக்சர் பட்டேல் சிறப்பாக ஆடி நல்ல ஸ்கோரை எட்ட உதவினர். தொடர்ந்து இந்தியா வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
குறிப்பாக ஹர்திக் பாண்டியா, அர்ஷதிப் சிங், பும்ரா ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினர். 20 -20 உலக கோப்பையை இந்திய அணி இரண்டாவது முறையாக வென்றெடுக்கும் நிலையில் ஒரு கேப்டனாகவும் வீரராகவும் சாதிக்க முடியாதவற்றை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சாதித்திருக்கிறார். மேலும் உலக கோப்பையுடன் தனது பயிற்சியாளர் பதவியில் இருந்தும் அவர் விடை பெற்று இருக்கிறார்.
2021 முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்த போதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் இறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இது ராகுல் ட்ராவிட்டுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினாலும் தனது கடைசி உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் முடித்திருக்கிறார். பலரும் ராகுல் டிராவிட்டுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் வீரர்கள் வெற்றி கோப்பையை ராகுல் டிராவிட்டிடம் கொடுத்தனர்.
அப்போது ஆக்ரோஷமாக அந்த கோப்பையை ஏந்தி ராகுல் டிராவிட் வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்திய அணி தொடரை வென்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி ரசிகர்கள் வரை லட்சக்கணக்கானோர் இந்திய அணியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் டிராவிட்டை வைத்து ராகுல் காந்தியை கலாய்த்து இருக்கிறது தெலுங்கானா பாஜக.
இது தொடர்பாக அந்த கட்சியின் அதிகார பூர்வ எக்ஸ் தளத்தில்,"தனைகள் வரும்போது ராகுல் டிராவிட்டை போல சமாளிக்க வேண்டும் ராகுல் காந்தியை போல அல்ல" என கூறியுள்ளனர். தற்போது இந்த ட்வீட்டை பகிர்ந்து பாஜகவினர் ராகுல் காந்தியை விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் விளையாட்டில் கூட அரசியலா என பாஜகவினரை காங்கிரஸ் கட்சியினர் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications