ஸ்டாலின் அப்படி எல்லாம் செய்ய மாட்டார்.. திமுகவினரை சந்திக்கும் கேசிஆர்.. கலக்கத்தில் காங்கிரஸ்!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் சில தினங்களில் சந்திக்க இருக்கிறார்.
Recommended Video
சென்னை: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் சில தினங்களில் சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பு திட்டம் காரணமாக தற்போது காங்கிரஸ் கட்சி கலக்கத்தில் உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின்தான் முதன் முதலாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது. சென்னையில் நடந்த திமுக கூட்டத்தில் ஸ்டாலின்தான் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்.
அதேபோல் எப்போதும் பாஜக கூட்டணியில் சேர மாட்டேன் என்றும் குறிப்பிட்டார். ஆனால் தேர்தலுக்கு பின், ஸ்டாலினின் நிலைப்பாடு மாற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

கேசிஆர் என்ன
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முடிவோடு தற்போது தென்னிந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தார். அதேபோல் கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் அவர் நேற்று காலை போனில் பேசினார்.

ஸ்டாலின் சந்திப்பு
திமுக தலைவர் ஸ்டாலினை இன்னும் சில நாட்களில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார். மே 13ம் தேதி இதற்காக தேதி குறிக்கப்பட்டுள்ளது. சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. இதில் திமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

என்ன பேச இருக்கிறார்
இந்த சந்திப்பில் இரண்டு முக்கியமான விஷயங்கள் பேச வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். அதன்படி ஸ்டாலினை காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாம் அணி உருவாக்க அழைக்க வாய்ப்புள்ளது. இல்லையென்றால் பாஜகவிற்காக ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூட கேசிஆர் கேட்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் பற்றி இவர்கள் பேச வாய்ப்பு குறைவு என்றும் கூறுகிறார்கள்.

காங்கிரஸ் அதிர்ச்சி
இதுதான் தற்போது காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து விடுவாரோ என்ற கேள்வி எழுந்து உள்ளது. அமைச்சரவையில் இடம் பிடிக்க ஆசைப்பட்டு, திமுக மூன்றாவது கூட்டணிக்கு போய் விடுமா என்ற கேள்வி அக்கட்சிக்கு எழுந்து உள்ளது.

ஆனால் என்ன
ஆனால் ராகுல் காந்தி ஸ்டாலின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார். தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் ஸ்டாலின் காங்கிரஸ் உடன்தான் நிற்பார் என்று அவர் நினைப்பதாக தெரிவிக்கிறார்கள். மே 13ம் தேதி சந்திப்பிற்கு பின் ஸ்டாலின் என்ன நிலைப்பாடு என்பது தெரியும் என்கிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications