பாஜக தேர்தல் வியூக கலந்துரையாடலில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை.. வெடிக்கும் சர்ச்சை!
சென்னை : பாஜகவினர், தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக நடத்திய ட்விட்டர் கலந்துரையாடலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தொடர்ச்சியாக, பாஜகவுக்கு எதிரான கட்சிகளைப் பற்றி விமர்சித்துப் பேசி வருகிறார்.
அரசியலமைப்புச் சட்ட பதவியான ஆளுநர் பொறுப்பை வகிப்பவர், கட்சி சார்பின்றிச் செயல்பட வேண்டும் என்ற மரபை மீறி தமிழிசை செயல்படுவதாக அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம்.
இந்நிலையில், பாஜகவினர் நடத்திட ட்விட்டர் ஸ்பேசஸ் மீட்டிங்கில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

ஆளுநர்கள் அரசியல்
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, பல்வேறு மாநிலங்களிலும் ஆளுநர்கள் மாற்றப்பட்டனர். பாஜக ஆட்சி புரியாத மாநிலங்களின் ஆளுநர்கள், அரசுக்கு பல்வேறு வகையில் குடைச்சல் கொடுத்து வருகின்றனர். புதுச்சேரி, மேற்கு வங்கம், தமிழ்நாடு என பல மாநிலங்களில் ஆளுநர்களின் தலையீட்டால் அந்தந்த மாநில முதல்வர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். தன்னிச்சையாக கூட்டம் நடத்துவது, பாஜக ஆதரவு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகளில் ஆளுநர்கள் ஈடுபடுவது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அரசியலமைப்பு பதவி
அரசியலமைப்புச் சட்ட பதவியை வகிக்கும் ஆளுநர்கள், கட்சி சார்பு கொண்டவராகச் செயல்படக்கூடாது என்பது சட்டம் வழங்கும் விதி. எனினும், இன்றைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், அரசின் நிர்வாகத் தலைவர்களான ஆளுநர்கள் பாஜகவின் பிரதிநிதிகளாகவே செயல்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. பாஜக கட்சியினரைப் போலவே ஆளுநர்கள் பேசி வருவது கண்டனங்களைச் சந்தித்து வருகிறது.

ட்விட்டர் ஸ்பேசஸ்
இந்நிலையில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ட்விட்டர் ஸ்பேசசில், பாஜகவினர், 2024 தேர்தலில் தென்னிந்தியாவுக்கான பாஜகவின் வியூகம் பற்றி ஒரு கலந்துரையாடலை நடத்தினர். இந்த ட்விட்டர் ஸ்பேசஸ் கலந்துரையாடலில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் பங்கேற்றுள்ளார்.

பாஜக கலந்துரையாடலில் ஆளுநர் தமிழிசை
இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கட்சி சார்பின்றிச் செயல்பட வேண்டிய ஆளுநர், பாஜக தேர்தல் வியூக கலந்துரையாடலில் பங்கேற்று பாஜக ஏஜெண்ட் போல செயல்படுவதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருபக்கம் தெலுங்கானா மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டுவிட்டு, இன்னொரு பக்கம் பாஜக நிகழ்ச்சிகளில் ஆளுநர் பிஸியாக இருக்கிறார் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஆளுநர் பதவியின் கண்ணியத்துக்கு அழகா?
ஆளுநர்கள் தங்கள் பதவிக் காலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இருக்கக்கூடாது என்பது விதி. அதற்காகவே, கட்சி சார்புள்ளவர்கள் ஆளுநராக பதவியேற்கும் முன், கட்சி உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவியிலிருந்தும் விலகுவது வழக்கம். அப்படி இருக்கும்போது, ஆளுநரான பிறகும் பாஜக தலைவர் போல, பாஜக நடத்தும் கூட்டங்களில் பங்கேற்பது ஆளுநருக்கு அழகா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications