ஹரிவராசனம் பாடலில் 108 வார்த்தைகள் உள்ளதால்தான் உயிரை காக்கும் ஆம்புலன்சுக்கு பெயர் 108: தமிழிசை
சென்னை: ஹரிவராசனம் பாடலையும் உயிரைக் காக்கும் ஆம்புலன்ஸையும் இணைத்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
Recommended Video
முதலில் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பின்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது.
தெலங்கானா புதுச்சேரி என இரு மாநிலங்களுக்கும் மாறி மாறி பணிகளைக் கவனித்து வருகிறார் தமிழிசை சௌந்தரராஜன்!

சபரி மாலா ஐயப்பா சேவா சமாஜம்
சபரி மாலா ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு விழா தேசிய சமிதி விழா வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழிசை சௌந்தரராஜன்
இந்த விழாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் 108 ஆம்புலன்ஸ் குறித்து சுவாரசிய தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இணையத்திலும் இதைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

ஹரிவராசனம்
அந்த நிகழ்ச்சியில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "ஹரிவராசனம் பாடலில் 366 எழுத்துக்கள் உள்ளது. அதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் தான் ஓராண்டு முழுக்க நம்மைத் தினம் தினம் காக்கிறது. அதேபோல ஹரிவராசனம் பாடலில் 108 வார்த்தைகள் உள்ளது. இந்த 108 என்ற எண் இந்து மதம், புத்த மதம், யோக கலை ஆகியவற்றில் மிகவும் சக்தி வாய்ந்த எண்ணாகும்.

ஆம்புலன்ஸ்
அதனால் தான் உயிரைக் காக்கும் ஆம்புலன்ஸ்க்கு கூட 108 என்று பெயர் வந்தது. சபரிமலையில் உள்ள 18 படிகளைத் தாண்டினால் உடல் நலம், மனநலம் ஆகியவை மேம்படும்" என்று அவர் தெரிவித்தார். ஹரிவராசனம் பாடலில் உள்ள 108 வார்த்தைகளையும் ஆம்புலன்ஸையும் இணைத்து ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசி உள்ளது இணையத்தில் வைரலாகி உள்ளது.

108 ஆம்புலன்ஸ் திட்டம்
இந்தியாவில் அவசரக் கால மருத்துவ, காவல் துறை மற்றும் தீ விபத்து உதவிகளுக்கு 108 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மொத்தம் 18 மாநிலங்களில் இவை செயல்படுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் இந்த அவசர ஆம்புலன்ஸ் திட்டம் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்டது.












Click it and Unblock the Notifications