பிரபல நடிகை ஷோபாவின் "அந்தரங்கம்".. திடீர்னு "மூக்குத்தி".. அந்த பாலத்துக்கு அடியில்.. பூரித்த சத்யா
சென்னை: ஷோபா மாதிரியான நடிகையை நான் பார்த்ததே இல்லை.. இப்போ வரைக்கும் என்னால அவங்கள மறக்கவே முடியவில்லை என்று நெகிழ்ந்து சொல்கிறார் பிரபல நடிகை பசி சத்யா.
நடிகை ஷோபா, குறுகிய காலம் நடித்தாலும், ஏறத்தாழ 20 படங்கள் அற்புதமான படங்களாக அமைந்துவிட்டன.. ஆனால், 18 வயதிலேயே தற்கொலை செய்து கொள்வார் என்று தென்னிந்திய சினிமாவே எதிர்பார்க்கவில்லை.
முள்ளும் மலரும், நிழல் நிஜமாகிறது, ஏணிப்படிகள், அழியாத கோலங்கள் இப்படி அவர் நடித்த ஒவ்வொரு படமும், ஏதேனும் ஒரு வகையில், ரசிகர்களிடம், தாக்கத்தை ஏற்படுத்தியது.

பசி படம்: அவரது அனைத்து படங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதலிடத்தில் இன்றுவரை நிற்கிறது 'பசி' என்ற படம்.. வற்றலான உடல், ஒடுக்கமான முகம், கலைந்த தலை, அத்துடன், குடும்ப பாரத்தை சுமக்கும் கேரக்டர் அது.. பிரபல நடிகைகளோ பிற நடிகைகளோ ஏற்கத்தயங்கும் வேடத்தை, துணிச்சலுடன் ஏற்று நடித்தவர். இந்த படத்தில் இவருடன் இணைந்து நடித்திருந்தவர் பசி சத்யா.. மிகச்சிறந்த கலைஞரான இவர், ஒருபேட்டியில் ஷோபா பற்றி கூறியிருந்தார்.
ஷோபா நடிப்பு: "பசி" படத்தில் புதிதாக நடிக்கும்போது, பெரிய ஆர்ட்டிஸ்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பேன். அப்போ பெரிய புகழுடன் இருந்த ஷோபா, என் மேல் தனி அக்கறை காட்டினாங்க. தன் காரிலேயே என்னை கூட்டிட்டுப் போவாங்க. அந்தப் படத்தின் 100-ம் நாள் வெற்றி விழா, 1980 மே 1-ம் தேதி மாலையில் நடக்கிறதா இருந்தது.. ஆனால், அன்று மதியம் ஷோபா தற்கொலை செய்துகிட்டார்.. தனிப்பட்ட முறையில் பெரிய வலியையும் வேதனையையும் அந்த மரணம் உண்டாக்கியது. "பசி" படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவங்களுக்குக் கிடைச்சது. அதையெல்லாம் அனுபவிக்காமல் 17 வயசுல இறந்துட்டது பெரிய சோகம்" என்று கூறியிருந்தார்.
இப்போது ஒரு டிவி பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், ஷோபா தன் அந்தரங்க விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வாரா? என்று அந்த பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது.. அப்போது மீண்டும் ஒருமுறை ஷோபா பற்றி தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை சத்யா.. அதன் சுருக்கம்தான் இது: "அந்த படத்தின் ஷூட்டிங்கில், 2 நாளிலேயே என்கிட்ட நெருங்கி பழகிட்டாங்க.. அதற்கு பிறகு, என்னுடன்தான் தங்கி, சாப்பிட வேண்டியிருந்தது.. ஆனால், புரட்டாசி மாசம் நான், நான்வெஜ் சாப்பிட மாட்டேன்.. அதற்காக அவங்களும் 30 நாளும் நான்வெஜ் சாப்பிடாமல் இருந்தாங்க..
துரைசாமி பாலம்: சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் துரைசாமி பிரிட்ஜ்ஜில் ஒரு சீன் எடுத்தாங்க.. மேலே ரயில் போகும் போகும்.. பாலத்திற்கு அடியில், ஷோபா நிப்பாங்க.. அப்போது நான் அவரிடம், "படுபாவி, இப்படி உன்னை ஏமாத்திட்டானே.. கடவுளே, இது நல்லா இருக்கா?" என்று நான் ஷோபாவை பார்த்து கேட்கணும்.. அந்த டயலாக் பேசும்போது, மேலே ரயில் போகும். அந்த சத்தத்தில் நான் சொல்லும் டயலாக்கும் கேட்காது.. ஆனாலும், கரெக்ட்டாக ஷோபா பதில் டயலாக் சொல்லுவாங்க.. நான் அசந்துபோயிட்டேன்.
இப்படி நிறைய நிறைய சீன்ல நல்லா நடிச்சிருப்பாங்க.. இவ்வளவு நுட்பமாக நடிச்சிருக்காங்களேன்னு ரொம்ப ஆச்சரியப்பட்டேன்.. இன்னைக்கும் வரைக்கும் அந்த ரோடு பக்கமே போனாலே அந்த ஞாபகம்தான் வருது,. ஒருநாள் திடீர்னு மூக்கு குத்திட்டு வந்து, "மூக்குத்தி நல்லா இருக்கா?"ன்னு கேட்டாங்க.. நல்லா இருக்குன்னு சொன்னேன்.. "நான் ஏன் மூக்கு குத்தினேன் தெரியுமா? ஒரு படத்தில் இதை போட்டுட்டு நடிச்சிட்டு இருந்தேன்.. இப்படியே மூக்குத்தி குத்தியிருந்தா குத்தினா நல்லாயிருக்கும்ன்னு சொன்னாரு"ன்னு சொன்னாங்க..
கிரேட் கிரேட்: உடனே நான், "யாரு"ன்னு கேட்டேன்.. அப்போதுதான் பாலுமகேந்திரா சார் விவகாரம் தெரிந்தது.. ஷோபாவை அவர் கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு சொன்னங்க. அன்னைக்கு ஷோபா மிகப்பெரிய நடிகை.. அவங்க இதெல்லாம் என்னை போல சின்ன ஆர்ட்டிஸ்ட்கிட்ட சொல்லணும்னு அவசியமே இல்லையே.. அதான் ஷோபா" என்றார் பசி சத்யா.












Click it and Unblock the Notifications