அக்னி முடிந்தாலும் தணியாத அனல்.. சென்னையில் இன்று அதிகபட்ச வெயில் பதிவாகும்.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை பதிவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு மிக அதிகமாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே அதிகரிக்கத் தொடங்கிய வெப்பம் மக்களை வாட்டி வதைத்து விட்டது. அதிலும் ஏப்ரல், மே மாதங்களின் வெப்பம் அதீத அளவில் இருந்தது. அது போக கத்திரி வெயில் என சொல்லப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் கடந்த மே 4ம் தேதி தொடங்கியது. கத்திரி வெயில் தொடங்கியதுமே தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தது.

இது மக்களுக்கு சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக அமைந்தது. பின்னர் வங்க கடலில் உருவான மோச்சா புயல் காரணமாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடுமையான புழுக்கமும் நிலவியது. வேலூர் சென்னை உள்பட பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்தது. 40 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவானது. அக்னி நட்சத்திரத்தின் பிற்பகுதியில் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
கடந்த மாதம் அக்னி நட்சத்திர வெயில் விடை பெற்றாலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நேற்று கூட கடுமையான வெப்பம் தமிழக முழுவதும் சுட்டெரித்தது. குறிப்பாக சென்னையில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. மீனம்பாக்கம் தான் மாநிலத்திலேயே அதிக வெப்பம் பதிவான இடமாக இருந்தது. இந்த நிலையில், சென்னையில் வெயிலின் தாக்கம் நேற்றை விட இன்று அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- சென்னையில் இன்று நேற்றை விட இன்று அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- சென்னையில் இன்று நேற்றை விட வெப்பம் அதிகமாக இருக்கப் போகிறது.

நேற்று மீனம்பாக்கம் தான் மாநிலத்திலேயே அதிக வெப்பம் பதிவான இடமாக இருந்தது. இன்றும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை பதிவாக வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஏற்கனவே வெயிலின் தாக்கம் ரண கொடூரமாக இருக்கும் நிலையில், இன்று வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக உள்ளதாக கணிப்புகள் கூறுவதால் மக்கள் வெளியில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications