சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜுன் 1 முதல் கோயில்கள் திறப்பு? இ பாஸ்.. குறைவான பக்தர்கள்.. இந்து அறநிலையத்துறை திட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஜுன் 1ம் தேதி முதல் இ பாஸ் மூலம் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து இந்து அறநிலையத்துறை ஆலோசித்து வருகிறது.

Recommended Video

    தமிழகத்தில் ஜூன் 1 முதல் கோயில்கள் திறப்பு? இந்து அறநிலையத்துறை திட்டம்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் லாக்வுடன் அறிவிக்கப்பட்டது. இந்த லாக்டவுன் தற்போது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Temples may open from June 1? hindu religious and charitable endowments department new plans

    இதனிடையே கடந்த மார்ச் 19ம் தேதி முதலே கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் இன்றி தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன.

    தற்போது அரசு ஊரடங்கில் நிறைய தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கனை ஜுன் 1 ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் பணீந்தர் ரெட்டி தலைமையில் உயர் அதிகாரிகள் அண்மையில் ஆலோசனை நடத்தினர்.

    அப்போது நடந்த ஆலோசனையில் ஜுன் 1ம் தேதிக்கு பிறகு கோயில்களில் தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் பக்தர்களை அனுமதிக்க அரசிடம் அனுமதி கோர முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மே 31 வரை தடை.. சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க கூடாது.. தமிழக அரசு மே 31 வரை தடை.. சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க கூடாது.. தமிழக அரசு

    இது தொடர்பாக அறநிலையத்துறை வட்டாரங்கள் கூறுகையில், மாநிலங்கள் முழுவதும் முக்கிய கோயில்களில் ஆன்லைன் மூலம் பாஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 500 பேர் வீதம் கோயில்களில் அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாஸில் குறிப்பிட்ட நேரத்தில் தான் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதுதொடர்பாக அரசுக்கு அறநிலையத்துறை ஆணையர் பணீந்தர் ரெட்டி பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அரசு அனுமதி அளித்த உடன் பக்தர்களுக்கு ஆன்லைனில் பாஸ் வழங்கப்படுமாம்.

    சமூக இடைவெளியை கடைபிடித்து கோயில்களில் தரிசனம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். கொரோனா முடியும் வரை இந்த நிலை தொடர வாய்ப்பு உள்ளது என்றார்கள்.

    English summary
    hindu religious and charitable endowments department plans to open temple from june 1?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X