Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டுக்கே மகிழ்ச்சி.. அரசு பஸ்ஸில் வருது "552" மாற்றம்.. போக்குவரத்து துறை மாஸ்.. இனி நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக போக்குவரத்து துறை புதிய அதிரடியை பிறப்பித்திருக்கிறது.. இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

சென்னையில் மாநகர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாகவே வலுத்து வந்தது.

Tender for manufacture of 552 low floor buses, Order Procurement by Tamil Nadu Government

அதாவது, சென்னை, மாநகர போக்குவரத்துக்கழகத்தின் கீழ் மட்டுமே, 629 வழித்தடங்களில் 3,233 மொத்தம் பஸ்கள் இயக்கப்படுகின்றன... இவைகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிறைய மற்றங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் நலன் கருதி ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா, எமர்ஜென்சி பட்டன், ஊன்றுகோல் வைப்பதற்கான வளையம் போன்றவை ஸ்பெஷலாக அமைக்கப்பட்டுள்ளன...

படிக்கட்டுகள்: ஆனால் இவையெல்லாம் முறையாக நடைமுறையில் உள்ளதா? என்று யாருமே கண்காணிப்பதில்லையாம்.. ஒருசில மாநகர பேருந்துகளில், மாற்றுத்திறனாளிகளின் ஊன்றுகோல் வைப்பதற்காக இடவசதி உள்ளது என்றாலும், இது படிக்கட்டை ஒட்டி அமைந்திருக்கிறதாம்.

தடுப்பு எதுவுமே இல்லாததால், பஸ் வேகமாக சென்றாலும், ஊன்றுகோல் தவறி விழுந்துவிடும்.. அல்லது படியில் ஏறுவோருக்கு இடையூறு ஏற்பட்டுவிடும். அதனால், பயணிகள் கால் வைக்கும் இடத்தில் ஏதேனும் தடுப்புகள் இருந்தால், ஊன்றுகோலால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

மின்சார பஸ்கள்: இதனிடையே, கடந்த மார்ச் மாதம், அமைச்சர் சிவசங்கர் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. அதில், 500 மின்சார பஸ்கள் உட்பட 2,271 பேருந்துகள் விரைவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில், மாற்றுத்திறனாளிகளுக்காக 420 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்..

இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும் மாற்றுதிறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்தவதற்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்கள்: முதல்வரின் உத்தரவுப்படி ரூ.500.97 கோடி மதிப்பீட்டில் 552 புதிய தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு (சென்னை மாநகர போக்குவரத்துகழம் - 352, கோயம்புத்தூர்-100, மதுரை- 100) மொத்தமாக 552 புதிய தாழ்தள நகர பேருந்துகளை மக்களின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அதிரடி நடவடிக்கை: இந்த முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும். மக்களின் போக்குவரத்து சேவை மேம்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

552 தாழ்தள பேருந்துகளைத் தயாரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+