அப்படிப் போடு..அடிச்சு தூக்குது தமிழக அரசு! மீண்டும் வருகிறது தாலிக்குத் தங்கம் திட்டம்! ஹேப்பி தான்
சென்னை: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் செயல்பாட்டில் இருக்கும் நான்கு திருமண நிதி உதவி திட்டங்களுக்காக தங்கம் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. இதை அடுத்து 8 கிராமில் 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தமிழ்நாட்டில் செயல்பாட்டுக்கு வரலாம் என சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பலன் பெறுவதற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருமண வயது கடந்தும் பல பெண்கள் திருமணம் செய்யாமல் இருக்கும் நிலையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா கொண்டு வந்தார்.
அதாவது மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனுடன் தங்கமும் வழங்கப்படும் என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

தாலிக்கு தங்கம்
இதேபோல இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் நான்கு திருமண நிதி உதவி திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வந்தன. ஜெயலலிதா ஆட்சியில் 25 ஆயிரம் ரூபாய் பணமும் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து 2016 ஆட்சிக்கு பிறகு அதனை உயர்த்தி வழங்க உத்தரவிட்டார் அப்போதைய முதலமைச்சரான ஜெயலலிதா. அந்த வகையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மணமகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் பணத்துடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. பட்டப் படிப்பு முடித்திருந்தால் 8 கிராம் தங்க நாணயமும் 50,000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது.
திமுக ஆட்சி
இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக அதிமுக குற்றம் சாட்டுகிறது. அதே நேரத்தில் தங்கத்தின் விலையும் 80 ஆயிரம் என்ற விலையை கடந்து விட்டது. அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்ட நிலையில் திமுக அதனை நிறுத்திவிட்டதாகவும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வருகிறார்.
தாலிக்கு தங்கம் திட்டம்
இந்த நிலையில் தங்கம் விலை உயர்வு காரணமாக ஏராளமான ஏழைக் குடும்பங்கள் கவலையில் இருக்கும் நிலையில் தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கிடையே மாதம் ஆயிரம் ரூபாய், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுவதால் தாலிக்கு தங்கம் திட்டம் தேவையில்லை என்பதுதான் திமுக அரசின் எண்ணமாக இருந்தது.
சமூக நலத்துறை
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தற்போது தங்க நாணயங்களை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளதால் தமிழகத்தில் மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை சமூக நலத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நான்கு வகையான திருமண நிதி உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பயனாளிகளுக்கு 8 கிராம் எடையில் 22 கேரட் தங்க நாணயங்கள் வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு டெண்டர்
45 கோடி ரூபாய் அளவுக்கு 5460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக பத்தாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 23ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி தொடர்பான முன்கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications