வேலை நேர அதிகரிப்பு மசோதா! மறுபரிசீலனை செய்ய வேண்டும்! அரசின் கதவை வலுவாக தட்டும் அரசியல் கட்சிகள்!
சென்னை: வேலை நேர அதிகரிப்பு மசோதாவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
அந்த வகையில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விடுத்துள்ள பதிவில், தொழிலாளர் விஷயம் என்பதால் அவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த மசோதா தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசு பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திடும் சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இது கடுமையான எதிர்ப்பை பரவலாக உருவாக்கியுள்ளதை உணர முடிகிறது.
பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டப்போதும், 2020 ஆம் ஆண்டு இதே சட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்ற வந்தபோதும், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், ஜனநாயக ஆற்றல்களும் ஒரு சேர எதிர்த்ததை நாம் வரவேற்றோம்.
தற்போது அது போன்ற தவறை திமுக அரசு செய்து பழிச்சொல்லுக்கு ஆளாகி விடக்கூடாது என கருதுகிறோம். கால சூழலுற்கேற்ற நெகிழ்வுத்தன்மை என அரசு கூறியிருந்தாலும், அதை தொழிலாளர் சமூகம் எதிர்க்கிறார்கள் எனும்போது அதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அண்ணா, கலைஞர் போன்ற முதுபெரும் அரசியல் ஆளுமைகளை முன்மாதிரியாக கொண்ட 'திராவிட மாடல் 'அரசு இவ்விஷயத்தில் தொழிலாளர் உணர்வுகளை புரிந்துக்கொண்டு இம்மசோதாவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications