ஆளுநர் ரவி வரம்பு மீறி செயல்படுகிறார்! உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! தமிமுன் அன்சாரி போர்க்கொடி!
சென்னை: ஆளுநர் ரவி வரம்பு மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, மத்திய அரசு உடனடியாக அவரை திரும்பப் பெற வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
சட்டசபையில் ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

வாசிக்காமல் தவிர்ப்பு
''ஒரு மாநில அரசின் அச்சடிக்கப்பட்ட உரையை உள்ளது உள்ளப்படியே வாசிப்பதுதான் கவர்னர் உரையின் மரபாகும். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய ஆளுநர் உரையில் அது மீறப்பட்டிருக்கிறது. அவர், திராவிட மாடல் என்ற வார்த்தையை மட்டுமின்றி சமூக நீதி, சுயமரியாதை, மத நல்லிணக்கம், சமத்துவம் போன்ற வார்த்தைகளையும் பெரியார், அண்ணா, அம்பேத்கார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர்களையும் வாசிக்காமல் தவிர்த்திருக்கிறார்.''

கொள்கை யுத்தம்
''அச்சடிக்கப்பட்ட வாசகங்களை தவிர்த்திருப்பதோடு, அச்சடிக்கப்படாத வாசகங்களை அவர் பயன்படுத்தியிருப்பதும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். இது ஆளுநரின் வரம்பு மீறிய செயலாகும். மேலும் தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகும். ஏற்கனவே தமிழ்நாடு என்ற வார்த்தையை எதிர்த்து, தமிழக மக்களுடன் ஒரு கொள்கை யுத்தத்தை அவர் தொடங்கி வைத்திருக்கிறார். இன்று சட்டப் பேரவையில் அவரது நடவடிக்கைகள் அதை உறுதி செய்திருக்கிறது.''

கடும் அதிர்வலைகள்
''இது தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை மக்களிடம் உருவாக்கியிருக்கிறது. தமிழக முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது வரவேற்க்கத்தக்கது. இதோடு மட்டுமின்றி சட்டமன்றத்திலேயே ஆளுநருக்கு எதிராக கண்டன தீர்மானத்தையும் நிறைவேற்றியிருப்பதும் பாராட்டுக்குரியது.''

திரும்பப் பெறுக
''ஒன்றிய அரசு, தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், தமிழக ஆளுனர் RN ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.''
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications